தனிமையாக உணர்கிறீர்களா? பேச்சுத் துணைக்கு குட்டி ரோபோ வந்தாச்சு..!


8-robo

கார் தயாரிப்பு மட்டுமின்றி, ரோபோ ஆராய்ச்சியிலும் கொடி கட்டி பறந்து வரும் டொயோட்டோ நிறுவனம், சமீபத்தில் மிகச்சிறிய ரோபோ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கிரோபோ மினி என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, தனிமையில் இருப்பவர்களுக்கு பேச்சுத் துணைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அளவு நான்கு அடி மட்டுமே. பார்ப்பதற்கு ஒரு கைக்குழந்தை போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும்.

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரவுள்ள கிரோபோ மினியின் விலை 400 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ தனது உரிமையாளருக்கு பிடித்தவை, பிடிக்காதவை குறித்து தெரிந்து வைத்துக் கொள்ளும். மேலும் காரில் பயணம் செய்யும் போது இதனை உடன் கொண்டு சென்றால், உரிமையாளரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருக்கும். இதனால் தனியாக நீண்ட தூரம் கார் பயணம் செய்பவர்கள், தனிமையை உணர மாட்டார்கள். மேலும் உங்கள் முக பாவனைகள் மூலம் உங்கள் மனநிலையை புரிந்து கொண்டு, அதற்கேற்றார்போல் உங்களிடம் பேசும்.

ஜப்பானில் தற்போது வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், அந்த நாட்டின் உற்பத்தி வேகமானது குறைந்து வருகிறது. எனவே ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் போன்ற நிறுவனங்களில் வேலை செய்ய ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முயற்சி நல்ல பலனை அளித்து வருவதால், ரோபோக்கள் குறித்த ஆராய்ச்சியில் அந்நாட்டில் உள்ள நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

நன்றி: http://money.cnn.com/2016/10/03/technology/toyota-robot-kirobo-mini/index.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous முகத்தில் சுருக்கமா? தொழில்நுட்பம் இருக்க, கவலை எதற்கு?
Next அமேசானுடன் போட்டியிட தயாராகும் வால்மார்ட்..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *