ஸிகா வைரஸ் ஆராய்ச்சியில் முதல் கட்ட சோதனை வெற்றி..!


9.zika virus vaccination

தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளை தாக்கியுள்ள ஜிகா வைரஸ், தற்போது அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவும் ஸிகா வைரஸ் தொற்று ஏற்பட்ட ஒரு சீனரை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்தாண்டு மே மாதம் பிரேசிலில் ஸிகா வைரஸ் நடத்திய மிகப்பெரிய தாக்குதலுக்கு பிறகு, தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் தீவிரமடைய தொடங்கின.

பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் இரவு, பகல் பாராத முயற்சிகளுக்கு கிடைத்த பலனாக, ஸிகா வைரஸ் தொற்றை குணப்படுத்தக்கூடிய மூன்று வகையான மருந்துகளின் முதல் கட்ட சோதனை வெற்றியடைந்துள்ளது. இந்த மூன்று வகை மருந்துகளும் ஸிகா வைரஸ் தொற்றுள்ள குரங்குகளுக்கு செலுத்தப்பட்டதில், அவை நல்ல பலனை அளித்துள்ளன, ஸிகா வைரஸ் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட 12 குரங்குகளின் உடலிலும்,தடுப்பு மருந்து கொடுக்கப்படாத 16 குரங்களின் உடலிலும் ஸிகா வைரஸ் கிருமிகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போடப்பட்ட குரங்குகள் மிக வேகமாக, நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளன.

இந்த தடுப்பு மருந்து இன்னும் மனிதர்கள் மீது சோதித்து பார்க்கப்படவில்லை. மனிதர்கள் மீது சோதனை நடத்தப்படும் போது, மூன்று தடுப்பு மருந்துகளில், எது பக்கவிளைவு இல்லாமல், ஸிகா வைரசிலிருந்து விரைவில் குணமளிக்கக்கூடியது என்பது தெரியவரும். எப்படியோ, இன்னும் சில காலங்களில் ஸிகா வைரசுக்கான தடுப்பு மருந்து விற்பனைக்கு வந்துவிடும் என நாம் கொஞ்சம் ஆறுதலடைந்து கொள்ளலாம்.

நன்றி: http://www.popsci.com/three-zika-vaccines-show-success-in-animal-models

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous எப்படி சாப்பிட வேண்டும்?
Next சாப்பிட்டு முடித்ததும் ஏன் தாகம் எடுக்கிறது?

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *