ஜிகா வைரசை தடுக்க நியூயார்க் நிர்வாகம் புதிய முயற்சி..!


5.zika virus

தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளை தாக்கியுள்ள ஜிகா வைரஸ், தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும் பரவி வருகிறது. இதனை அந்த நகர நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து ஜிகா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் நியூயார்க் நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது.

ஜிகா வைரஸ் கொசுக்களால் பரவும் என்பதாலும், கொசுக்கள் கழிவு நீர் தேங்கியுள்ள பகுதியில் உருவாகிறது என்பதாலும் கழிவு நீர் குட்டைகளை நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது நியூயார்க் நகர நிர்வாகம்.

அந்த நகரத்தின் சுரங்க ரயில்சேவைப் பாதையில் பல இடங்களில் இது போன்ற கழிவு நீர் குட்டைகள் இருக்கின்றன. எனவே அவற்றில் நிரம்பியுள்ள கழிவு நீரை சிறப்பு இயந்திரங்கள் மூலம் வெளியேற்ற உள்ளனர். மேலும் கொசுக்களின் லார்வாக்களை கொல்லும் மாத்திரைகளும் அந்த பகுதி முழுவதும் தெளிக்கப்பட உள்ளன.

கர்ப்பம் தரித்த பெண்களை ஜிகா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் தலை சிறியதாக, பிறவிக்குறைபாடுகளை கொண்டிருப்பதாக இருக்கும். மூளை பாதிக்கப்பட்டிருக்கும். பிரேசிலில் இப்படி ஏறத்தாழ ஆயிரக்கணக்கான குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறந்துள்ளதால், அங்கு பெண்கள் கர்ப்பம் அடைய வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: http://www.popsci.com/how-nyc-is-planning-to-keep-zika-out-subway

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous நிலவில் ஆய்வு செய்ய இருக்கும் தனியார் நிறுவனம்..!
Next மூளையை திண்ணும் அமீபாவால் பாதிக்கப்பட்ட இளைஞர்..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *