இணைய வேகம் குறைவா ? உடனே புகார் அனுப்பலாம்


இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் திறன்பேசிகளுக்கான மைஸ்பீடு (MySpeed) என்ற குறுஞ்செயலியை வெளியிட்டுள்ளது.

நீங்கள் 3ஜி பயன்படுத்தும்போது 2ஜி இணைய வேகத்தில் இணைப்பு இருந்தால் உடனே டிராய்க்கு புகார் அளிக்கலாம். அதற்கான ஆதாரத்தோடு வழங்க டிராய் அமைப்பு மைஸ்பீடு என்ற குறுஞ்செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மைஸ்பீடு குறுஞ்செயலியானது உங்களின் இணைய வேகம் குறைவாக இருந்தால் நேரடியாக சேவை வழங்குநருக்கோ அல்லது ஒழுங்குமுறை ஆணையத்திற்கோ புகாரை அனுப்பலாம்.

இணைய சேவை வழங்குபவர்களின் மீது தொடர்ந்து வரும் புகார் பிரச்சனையால் அவர்களை கண்காணிக்க இந்த குறுஞ்செயலியை வெளியிட்டுள்ளது.

உங்கள் ஆன்டிராய்டு குறுஞ்செயலி சந்தையில் MySpeed என்று தேடினால் இந்த குறுஞ்செயலியை நிறுவலாம்.

இந்த குறுஞ்செயலி 23 எம்பி கொள்ளளவு உள்ளது.

இந்த குறுஞ்செயலியில் உங்கள் இணையத்தின் வேகத்தை சோதிக்கவும், சோதித்தபின் வேகம் குறைவாக இருந்தால் Send to TRAI என்ற பொத்தானை அழுத்தினால் போதும். அதோடு இந்த குறுஞ்செயலி எந்த இடத்தில் வேகம் குறைவோ அந்த இடத்தையும் குறிப்பிட்டு அனுப்புகிறது. அதோடு இதுவரை செய்த சோதனைகளையும் சேமித்து வைத்துக்கொள்கிறது. மற்ற குறுஞ்செயலிகளைப் போல விளம்பரங்கள் இடம்பெறாது.

இனிமேல் வாங்கிய காசுக்கு குறைவான வேகத்தை அளித்து வாடிக்கையாளர்களை ஏமாற்ற இயலாது இப்போது,

https://play.google.com/store/apps/details?id=com.rma.myspeed\

தொகுப்பு :  செல்வ முரளி

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளை பற்றிய புதிய வரைபடம்!
Next ஐபோன் டிசைன் என்னுடையது? ரோஸ்

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *