மரபணு தாக்கத்தால் மார்பக புற்றுநோயா!


Trust Sanger Institute in Cambridge பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட ஆராய்ச்சியில் மூலம் மரபணுதாக்கத்தால் தான் பெரும்பாலும் புற்றுநோய் ஏற்படுகிறது என்று கூறியுள்ளனர்.

இன்றைய காலக்கட்டத்தில் 5 பேர்களில் ஒருவருக்கு கண்டிப்பாக மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. மார்பக புற்றுநோய் நமது உடலை பாதித்தால் உடலின் மற்ற பகுதிகளிலும் சிறு சிறு கட்டிகள் தோன்றும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

Trust Sanger Institute in Cambridge பல்கலைகழகத்தின் டாக்டர் லுசியேட்ஸ் மற்றும் அவருடைய குழுவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 1000 நோயாளிகளை சோதனை செய்து பார்த்தனர். அவர்களில் 161 பேர் புற்றுநோய் பாதிப்பு குணமானவர்களே என கண்டறிந்தனர்.

161 பேருக்கு மீண்டும் புற்றுநோய் எப்படி வந்தது என்பதை ஆராய்ந்து பார்த்ததில், அவர்களுடைய முன்னோர்கள் வழியாக இவர்களுக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கண்டறிந்தார்கள்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous இரத்த நாள தசைபிடிப்புகள் மாரடைப்புக்குக் காரணமா?
Next சிறுநீரக புற்றுநோய்க்கு புதிய மருத்துவ முறை

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *