வீட்டிலேயே செரலாக் தயாரிப்பு


15

குழந்தை பிறந்து 6 மாதங்கள் கழித்து குழந்தைகளுக்கு நாம் சாதம் போன்ற உணவை கொடுக்க முடியாது. அவ்வாறு கொடுத்தால் அது குழந்தைக்கு செரிமானம் ஆகாமல் பல பிரச்சனைகள் வந்து விடுகின்றன. அதனால் தாய்மார்கள் குழந்தைகளுக்கு செரலாக்கை கடைகளில் வாங்கி ஊட்டுகிறார்கள்.

செரலாக்கில் அதிக ஆரோக்கியமும், ஊட்டச்சத்தும் அடங்கியுள்ளது. அப்படிப்பட்ட சத்துக்கள் நிறைந்த செரலாக்கை நாம் கடையில் வாங்காமல் வீட்டிலேயே எளிய முறையில் தயார் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

  1. அரிசி – 1 கப்
  2. பாசிபருப்பு – 1கப்
  3. கோதுமை – 1/2 கப்
  4. சர்க்கரை , சீரகம் – 3-4 ஸ்பூன்

செய்முறை:

  1. அரிசி, கோதுமை , பாசிப்பருப்பு மூன்றையும் தனிதனியாக கழுவி கொள்ள வேண்டும். கழுவிய பிறகு அதனை நன்றாக ஆற வைக்க வேண்டும்.
  2. அரிசி, கோதுமை , பாசிப்பருப்பு மற்றும் சர்க்கரை அனைத்தையும் தனிதனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. நன்றாக ஆறியவுடன் அந்த அனைத்து பொருள்களையும் சேர்த்து பவுடராக அறைத்துக் கொள்ள வேண்டும்.
  4. பின்பு காற்று போகாத டப்பாவில் வைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு வழங்கும் வழிமுறை:

ஒரு கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் நெய் விட வேண்டும். பிறகு நாம் அறைத்த பவுடரை 2 – 3 ஸ்பூன் போட்டு நெய்யுடன் வறுக்க வேண்டும்.

16

பிறகு அந்த கலவைவுடன் தண்ணீர் சேர்த்து 3 – 4 நிமிடம் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

17

உங்கள் குழந்தை சாப்பிடும் விதத்திற்கு ஏற்றவாறு இந்த செரலாக்கை செய்து கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு

http://lav-art-craft-food.blogspot.in/2012/03/baby-food-home-made-cerelac.html

Previous ரத்த வங்கிகளுக்கு புதிய உத்தரவு
Next ஆக்சிஜனை ஊசி மூலம் செலுத்துதல்

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *