Posts in category

விவசாயம்

விவசாயம்

பூச்சிக் கொல்லி மருந்துகள், பயிர்களுக்கும், சூழலுக்கும் ஏற்படுத்தும் கேடுகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பூச்சிகளுக்கு, பயிர்கள் இரையாகாமல் காப்பாற்ற, தடுப்பு மருந்தைப் போட முடியும் என, பின்லாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எல்லா தாவரங்களுக்கும், தங்களை தற்காத்துக் கொள்ளும் திறன், அவற்றின் மரபணுக்களிலேயே உண்டு. இயற்கை அளித்திருக்கும் இந்த திறனை மேலும் அதிகரித்தாலே, தாவரங் களால் பூச்சிகளை விரட்டியடிக்க முடியும் என்கின்றனர் ஹெல்சிங்கி பல்கலைக்கழக விஞ்ஞானிகள். இவர்கள் பிரஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி …

0 207

தமிழகத்தில் நிலக்கடலை 2.17 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. எக்டேருக்கு 2 ஆயிரம் கிலோவாக இருந்த உற்பத்தி பருவநிலை மாற்றம் காரணமாக 685 கிலோவாக குறைந்துள்ளது. உயர் விளைச்சல் ரகங்கள் பயன் படுத்தாதது, தொழில்நுட்பங்களை சரியான நேரத்தில் கடைப்பிடிக்காதது, பூச்சி மற்றும் நோய்களுக்கு கட்டுப்படுத்துவதில் உள்ள சிரமங்கள் போன்றவை மகசூல் குறைவு காரணிகளாக உள்ளன. மகசூல் பெறுவது எப்படி நிலத்தை சமன்படுத்துதல், பார் – சால் அமைப்பு முறை, தரமான விதை தேர்வு, விதை அளவை …

0 71

டோக்கியோ : ஜப்பானில் ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படும் இரண்டு “யூபாரி’ முலாம்பழங்கள், ரூ.20 லட்சத்திற்கு ஏலம் போனது. ஜப்பானின் யூபாரி நகரில் விளைவிக்கப்படும் முலாம்பழங்கள், அந்த நாட்டில் மிகவும் பிரசித்திப் பெற்றவை. இந்தப் பழங்களை வாங்குவதும் ஆடம்பரத்தின் அடையாளமாக அந்த நாட்டில் கருதப்படுகிறது. இதன் காரணமாக, இந்த வகைப் பழங்களை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு போட்டி நடக்கும். யூபாரி நகரையொட்டிய சப்போரோவில் இரண்டு யூபாரி முலாம்பழங்கள் ஏலத்துக்கு விடப்பட்டது. இந்த இரு பழங்களையும் வாங்குவதற்கு பலர் …

0 38

இந்தியாவிலேயே மேகாலயா மாநிலத்தில் மட்டும்தான் 93.6% வேளாண் கடன் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குச் சென்றடைகிறது. மற்ற மாநிலங்களில், சிக்கிம் உட்பட சிறு மற்றும் குறு விவசாயிகள் கடன் விகிதாச்சாரம் 1.67% என்று அதலபாதாளத்தில் உள்ளது. எனவே வேளாண் கடன் வழங்குதலில் முறையான திட்டமிடல் அவசியம் என்றும், யாருக்குத் தேவை உள்ளதோ அவர்களுக்குத்தான் கடன் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் முறைப்படுத்த வேண்டியுள்ளது. வழங்கப்படும் வேளாண் கடன்களில் சிறு மற்றும் குறு விவசாயிகள் பெறுவது சொற்பம்தான், சில வேளைகளில் …

0 37

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்  சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள்  60 சதவீத  கூலி உயர்வு, தேசிய விடுப்புச் சம்பளம் ரூ 300 வழங்க கோரி 11-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால், சாலை மறியலைக் கைவிட்டு தொழிலாளர்கள் பேரணியாக சென்றனர்.

0 45

தொடர்புக்கு: 94423 56475 ப. மதிவாணன் பட்டுநுால் தயாரிப்பு போன்ற தொழில்கள் உசிலம்பட்டி பகுதிக்கு புதியவை. தண்ணீர் பற்றாக்குறையினால் மாற்றுத்தொழிலுக்கு முயற்சிப்பவர்களுக்கு இந்த தொழில் லாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது. பட்டுப்புழு வளர்ப்பில் ஆங்காங்கே விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில் பெங்களூரு ராம்நகரில் பட்டுநுால் தயாரிப்பு தொழிலை பழகிய அக்கினி, உசிலம்பட்டிக்கு வந்து அதனை செயல்படுத்தி 10 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கியுள்ளதுடன், மாதம் 30 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் லாபம் ஈட்டி வருகிறார். தேனியில் பட்டுக்கூடு தேனியில் …

0 74

 மஞ்சள் வெளி மாநி­லங்­க­ளுக்­கும், வெளி­நா­டு­க­ளுக்­கும் ஏற்­று­மதி அதி­க­ரிப்­பால், மஞ்­சள் விலை, 1,000 ரூபாய் வரை உயர்ந்­துள்­ளது,மஞ்­சள் வணி­கர்­கள் மற்­றும் கிடங்கு உரி­மை­யா­ளர்­கள் சங்க செய­லர் சத்­தி­ய­மூர்த்தி தெரி­வித்­தார். பிப்­ர­வரி முதலே தேசிய அள­வில், புதிய மஞ்­சள் வரத்து இருப்­பி­னும், ஏப்., 14க்குப்­பின், புதிய மஞ்­சள் வரத்து அதி­க­ரித்­துள்­ளது. விரலி மஞ்­சள், குவிண்­டால், 7,000 ரூபாய் முதல், 9,000 ரூபாயை கடந்­துள்­ளது. ஈரோடு மார்க்­கெட்­டுக்கு, கர்­நா­டகா மஞ்­சள் வரத்து முடிந்து, தற்­போது தர்­ம­புரி பகு­தி­யில் இருந்து புதிய மஞ்­சள் …

0 52

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) செய்து வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக அக்ரிகல்சர் ஆபிசர் (எக்ஸ்டென்ஷன்) பிரிவில் தற்சமயம் காலியாக இருக்கும் 192 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. வயது: அக்ரிகல்சர் பிரிவில் முதுநிலைப் பட்டம் முடித்தவர்களாக இருந்தால் 32 வயதுக்குள்ளும், இளநிலைப்பட்டம் முடித்தவர்களாக இருந்தால் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: அக்ரிகல்சர் பாடப் பிரிவில் பி.எஸ்சி., படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: …

0 48

சேலம் பள்ளப்பட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 600 மூட்டை நிலக்கடலை 6 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.சேலம் பள்ளப்பட்டி கூட்டுறவு விற்பனை சங்கத்தில், மஞ்சள் மற்றும் நிலக்கடலை ஏலம் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில், 600 மூட்டை நிலக்கடலையை விவசாயிகள் கொண்டு வந்தனர். நிலக்கடலைக்கு அதிகபட்ச விலையாக மூட்டைக்கு(60 கிலோ) 2,305 மற்றும் குறைந்தபட்ச விலையாக 1,540 விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதிகபட்ச விலையாக ஒரு கிலோவிற்கு 38.50 மற்றும் குறைந்தபட்ச விலையாக 25.50 …

0 106

சேலம் மாவட்டத்தில் வெண்டைக்காய் வரத்து சரிவடைந்ததால், அதன் விலை கிலோ 4 ரூபாய் உள்ளது. சேலத்தில், அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி உள்பட, 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இங்கு ஆத்தூர், பனமரத்துப்பட்டி, கெங்கவல்லி, ஓமலூர், உத்தமசோழபுரம், வாழப்பாடி உள்பட, பல்வேறு பகுதிகளில் இருந்து, வெண்டைக்காய் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரத்தில் தினமும் ஒவ்வொரு சந்தைக்கும் தலா, 80 கிலோ வெண்டைக்காய் விற்பனைக்காக வந்தது. அப்போது அவற்றின் விலை கிலோ, 25ரூபாயாக இருந்தது. தற்போது வறட்சி …

0 56