Posts in category

வணிகம்

வணிகம்

இந்­தி­யா­வில் முதன் முத­லாக, ‘பி.எம்.டபிள்யு., மினி கன்ட்­ரி­மேன்’ கார் தயா­ரிப்பை துவக்­கி­யுள்­ளது. இந்­நி­று­வ­னத்­தின், தலை­வர் விக்­ரம் பவா, சென்னை அருகே, சிங்­க­பெ­ரு­மாள்­கோ­வி­லில் உள்ள தொழிற்­சா­லை­யில், கார் தயா­ரிப்பை சென்னை தொழிற்­சா­லை­யில், இரண்­டாம் தலை­மு­றை­யைச் சேர்ந்த, ‘மினி கன்ட்­ரி­மென்’ கார் தயா­ரிக்­கப்­ப­டு­கிறது. இந்­தி­யா­வில், பி.எம்.டபிள்யு., வர­லாற்­றில், புதிய அத்­தி­யா­யம். கடந்த ஆண்டு, ‘மினி’ மாடல் கார் விற்­பனை, 17 சத­வீ­தம் உயர்ந்து, 421ஆக அதி­க­ரித்­துள்­ளது. இந்­தாண்டு, விற்­ப­னையை இரு மடங்கு அதி­க­ரிக்க திட்­ட­மிட்­டுள்­ளோம். பெட்­ரோ­லில் இயங்­கும், ‘மினி கன்ட்­ரி­மேன்’, …

0 52

டோக்கியோ : ஜப்பானில் ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படும் இரண்டு “யூபாரி’ முலாம்பழங்கள், ரூ.20 லட்சத்திற்கு ஏலம் போனது. ஜப்பானின் யூபாரி நகரில் விளைவிக்கப்படும் முலாம்பழங்கள், அந்த நாட்டில் மிகவும் பிரசித்திப் பெற்றவை. இந்தப் பழங்களை வாங்குவதும் ஆடம்பரத்தின் அடையாளமாக அந்த நாட்டில் கருதப்படுகிறது. இதன் காரணமாக, இந்த வகைப் பழங்களை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு போட்டி நடக்கும். யூபாரி நகரையொட்டிய சப்போரோவில் இரண்டு யூபாரி முலாம்பழங்கள் ஏலத்துக்கு விடப்பட்டது. இந்த இரு பழங்களையும் வாங்குவதற்கு பலர் …

0 38

வால்­மார்ட் – பிளிப்­கார்ட் ஒப்­பந்­தத்தை எதிர்த்து சி.ஏ.ஐ.டி வழக்கு தொட­ரப்­படும்’ இந்த அமைப்பு வெளி­யிட்­டுள்ள அறிக்கை: வால்­மார்ட், பிளிப்­கார்ட் நிறு­வ­னத்­தின் பெரும்­பான்மை பங்­கு­களை வாங்கி, சில்­லரை வணி­கத்­தில் ஆதிக்­கம் செலுத்த திட்­ட­மிட்­டுள்­ளது. இத­னால், சில்­லரை விற்­ப­னை­யா­ளர்­கள் பாதிக்­கப்­ப­டு­வர். அன்­னிய நேரடி முத­லீட்டு விதி­மு­றை­களை மீறி, சட்­டத்­திற்கு புறம்­பாக இந்த ஒப்­பந்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதை, மத்­திய அரசு உன்­னிப்­பாக ஆய்வு செய்ய வேண்­டும். விரை­வில் இந்த ஒப்­பந்­தத்தை எதிர்த்து, சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். மின்­ வ­ணி­கத்தை முறைப்­ப­டுத்த, உட­ன­டி­யாக, …

0 27

இதன்படி பிஎஸ்என்எல் நிறுவனம், ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ரூ.39க்கு இலவச காலிங் சலுகையாகவும், எஸ்டிவி பேக்காகவும் வழங்கியுள்ளது ஆனால் இதன் வேலிடிட்டி காலம் 10 நாட்களாகும். இதில் அன்லிமிடட் வாய்ஸ் கால், 100 இலவச எஸ்எம்எஸ், மும்பை, டெல்லி தவிர அனைத்து நகரங்களிலும் ரோமிங் வசதி, இலவச ரிங்டோன் செட் செய்தல் போன்ற வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பல்வேறு சலுகைகளுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.39க்கு காலிங் சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த …

0 37

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட்டை விலைக்கு வாங்க, அமெரிக்க ஆன்லைன் நிறுவனமான அமேசானும், வால்மார்ட்டும் ஆர்வம் காட்டின அமேசான் நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் போட்டியாக வால்மார்ட் நிறுவனம் விளங்குகிறது. இந்தியாவில் அமேசானின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் வால்மார்ட் நிறுவனம் அதற்கான செயல் திட்டங்களை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இறுதியாக இந்த போட்டியில் வென்றுள்ளது வால்மார்ட். பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது வால்மார்ட். இந்தநிலையில், இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனம் வளர்ந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. …

0 34

தொடர்புக்கு: 94423 56475 ப. மதிவாணன் பட்டுநுால் தயாரிப்பு போன்ற தொழில்கள் உசிலம்பட்டி பகுதிக்கு புதியவை. தண்ணீர் பற்றாக்குறையினால் மாற்றுத்தொழிலுக்கு முயற்சிப்பவர்களுக்கு இந்த தொழில் லாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது. பட்டுப்புழு வளர்ப்பில் ஆங்காங்கே விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில் பெங்களூரு ராம்நகரில் பட்டுநுால் தயாரிப்பு தொழிலை பழகிய அக்கினி, உசிலம்பட்டிக்கு வந்து அதனை செயல்படுத்தி 10 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கியுள்ளதுடன், மாதம் 30 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் லாபம் ஈட்டி வருகிறார். தேனியில் பட்டுக்கூடு தேனியில் …

0 74

வாடிக்கையாளர்களுக்குத் தேவையில்லாத வணிக அழைப்புகள் செய்தது மற்றும் தொல்லை தரும் எஸ்எம்எஸ் அனுப்பியது என டெலிகாம் நிறுவனங்கள் மீது 2.81 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் விதித்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. 2017-ம் ஆண்டில் மட்டும் சேவை தர விதிமுறைகளின் இணக்கமின்மை மற்றும் சேவை தரத்தின் இணக்க அறிக்கைகளைத் தாமதமாகச் சமர்ப்பித்த காரணங்களுக்காக டெலிகாம் நிறுவனங்கள் மீது 50 உத்தரவுகளை இட்டதாகவும் 4.7 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இவை பெரும்பாலும் 2ஜி, 3ஜி, பிராட்பேண்ட் …

0 22

 மஞ்சள் வெளி மாநி­லங்­க­ளுக்­கும், வெளி­நா­டு­க­ளுக்­கும் ஏற்­று­மதி அதி­க­ரிப்­பால், மஞ்­சள் விலை, 1,000 ரூபாய் வரை உயர்ந்­துள்­ளது,மஞ்­சள் வணி­கர்­கள் மற்­றும் கிடங்கு உரி­மை­யா­ளர்­கள் சங்க செய­லர் சத்­தி­ய­மூர்த்தி தெரி­வித்­தார். பிப்­ர­வரி முதலே தேசிய அள­வில், புதிய மஞ்­சள் வரத்து இருப்­பி­னும், ஏப்., 14க்குப்­பின், புதிய மஞ்­சள் வரத்து அதி­க­ரித்­துள்­ளது. விரலி மஞ்­சள், குவிண்­டால், 7,000 ரூபாய் முதல், 9,000 ரூபாயை கடந்­துள்­ளது. ஈரோடு மார்க்­கெட்­டுக்கு, கர்­நா­டகா மஞ்­சள் வரத்து முடிந்து, தற்­போது தர்­ம­புரி பகு­தி­யில் இருந்து புதிய மஞ்­சள் …

0 52

மொபைல் போன் சேவையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை ‘கட்டிப்போட்ட’ ஜியோ நிறுவனம் தற்போது பிராட்பேண்ட் சேவையை விரிவுபடுத்துகிறது. மக்களை ஈர்க்கும் விதமாக 1100 ஜிபி இலவச டேட்டா வழங்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தையில் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் அறிவித்த கேஷ்பேக் ஆஃபர் குறைந்த அளவில் அதிக டேட்டா கிஃப்ட் வவுச்சர் என அனைத்து சலுகைகளும் …

0 17

சிசிஐ உத்தரவுக்கு தடை ஆன்லைன் தேடல் சந்தையில் முறைதவறி நடந்ததற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ.136 கோடி அபராதம் விதித்த போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தின் (சிசிஐ) உத்தரவுக்கு தேசிய நிறுவனங்கள் மேல்முறையீட்டு சட்டத் தீர்ப்பாயம் (என்சிஎல்ஏடி) தடை விதித் துள்ளது. இதுதொடர்பான கூகுளின் மனுவை விசாரித்த தேசிய நிறுவனங்கள் மேல்முறையீட்டு சட்ட தீர்ப்பாயத்தின் நீதிபதி எஸ்.ஜெ.முகோபத்யா தலைமையிலான அமர்வு, அபராதத் தொகையில் 10 சதவீதத்தை 4 வாரங்களுக்குள் முன்பணமாக கூகுள் செலுத்தவேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட …

0 20