Posts in category

குறுஞ்செயலிகள்

குறுஞ்செயலிகள்

சமீபகாலமாக கணிசமானோர் மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு மாறி வருவதால், 2018-ஆம் ஆண்டு உலகில் நடைபெறும் மொத்த திறன்பேசி விற்பனையில்  62 சதவீதம் இந்தியர்களின் பங்களிப்பு இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. வேகமான  இணைய  சேவை  மற்றும்  ஊக்குவிக்கப்படும் மின்னணு பணப்பரிவர்த்தனை காரணமாக  திறன்பேசிகள்  வாங்கும்  இந்தியர்களின்  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகரித்துவரும் திறன்பேசி மின்னணு பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்களுக்கென பிரத்யேக பணப்பரிவர்த்தனை செயலிகளை உருவாக்கி வருவது ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சீனத் …

0 7

என்னாப்பு போன்ற செயல்பாடுகளை கொண்ட டெலகிராம் குறுஞ்செயலி, கடந்த வாரம் பாதுகாக்கப்பட்ட குரல் குறுஞ்செய்தி (என்கிரிப்டட்) வசதியை தனது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த வசதி ஈரான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே, அந்நாட்டு அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. ”ஈரானின் இந்த தடை குறித்து எங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை. ஏன் இந்த தடை விதிக்கப்பட்டது என்பது குறித்து தற்போது வரை எங்களுக்கு காரணம் தெரியவில்லை. ஆனால் எங்களைப் போல சேவை அளித்து வரும் மற்ற …

0 6

கூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் எர்த்’ சேவை, பல்வேறு புதிய வசதிகளுடன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகளையும், வடிவமைப்புகளையும் ஏற்படுத்த அந்த நிறுவனத்திற்கு 2 ஆண்டுகள் பிடித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள கூகுள் எர்த் வசதியை, ஆண்ட்ராய்டு மற்றும் குரோமில் பார்க்க முடியும். ”வாயேஜர்” என அழைக்கப்படும் புதிய வசதி மூலம், சுற்றுலாவுக்கு செல்லக் கூடியவர்கள், கூகுள் எர்த்தில் பல்வேறு ஆலோசனைகள், உதவிகளை பெற முடியும். ”திஸ் இஸ் ஹோம்” என்ற வசதி மூலம், உலகம் முழுவதும் உள்ள …

0 7

”இந்தியா மற்றும் ஸ்பெயின் போன்ற ஏழை நாடுகளில் தொழிலை விரிவுபடுத்த விரும்பவில்லை.” என ஸ்நாப்சாட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கருத்து தெரிவித்திருந்த கருத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஸ்நாப்சாட் நிறுவனத்தை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தால், கணிசமான அளவு ஸ்நாப்சாட்டின் இந்திய வாடிக்கையாளர்கள், தங்கள் திறன் பேசியிலிருந்து அந்நிறுவன குறுஞ்செயலியை நீக்கினர். மேலும் பலர் கூகுள் பிளே ஸ்டோரில், ஸ்நாப்சாட் குறுஞ்செயலியின் மதிப்பை ஐந்து நட்சத்திரங்களில் இருந்து 1 நட்சத்திரமாக …

0 6

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ’ஸ்டீவ் வோஸ்நியாக்’, வரும் 2075-ஆம் ஆண்டு வரையிலும் ஆப்பிள், முகநூல் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எனவும், அந்த காலகட்டத்தில் இந்த மூன்று நிறுவனங்களும் உலகை ஆளும் எனவும் தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் ஐ.பி.எம் நிறுவனம் போல நீண்ட காலத்திற்கு தனது சேவையை அளிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் நடைபெற்ற சிலிகான் வேலி கருத்தரங்கில் பேசிய அவர், இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ”கடந்தாண்டின் …

0 4

மேப் இந்தியா மற்றும் விசிட் இணைய சேவை நிறுவனம் ஆகியவை இணைந்து மத்திய அரசின் மருத்துவ உதவிகளுக்கான “ஸ்வஸ்தா பாரத் எம்-ஹெல்த்” என்ற புதிய குறுஞ்செயலியை உருவாக்க உள்ளன. இந்த குறுஞ்செயலிக்கான வரைபட உதவியை இந்த நிறுவனங்கள் அளிக்க இருக்கின்றன. இந்த குறுஞ்செயலியை தரவிறக்கம் செய்த பின்னர், ஏதேனும் அவசர மருத்துவ சேவைகளுக்கு அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸை அழைக்க முடியும். அருகிலுள்ள மருத்துவமனைகள், ஆய்வுக்கூடங்கள், மருந்துக்கடைகள் ஆகியவற்றை அறிய முடியும். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைகளை குறுஞ்செய்தி வடிவிலோ, …

0 10

என்னாப்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதற்காக அந்நிறுவனம் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் கண்டறியும் எந்த வசதியும் முதலில் ஒரு குறிப்பிட்ட திறன் பேசிகளில் சோதிக்கப்பட்டு, அதன் பின்னர் முதற்கட்டமாக பீட்டா பதிப்பு வெளியிடப்படுகிறது. பீட்டா பதிப்பில் இந்த வசதிகள் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றால் மட்டுமே,  மற்ற திறன்பேசிகளுக்கு தனது வசதியை என்னாப்பு நிறுவனம் விரிவுபடுத்துகிறது. இந்நிலையில் என்னாப்பு மூலம் பேசிக்கொள்ளும் இருவர், தாங்கள் …

0 5

அடுத்த நிதியாண்டில் ஆறு திறன்பேசி விளையாட்டு கேம்களை அறிமுகப்படுத்த உள்ளதாக ஜப்பானின் பிரபல சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய வெளியீடுகள் மூலம் நிண்டெண்டோ நிறுவனத்தின் போக்கி மான் கோ விளையாட்டின் வெற்றியை, தங்கள் நிறுவன விளையாட்டுகள் முறியடிக்கும் என சோனி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த ஆறு விளையாட்டுகளில் சிலவற்றை இலவசமாக அளிக்க உள்ளதாகவும் இந்த புதிய விளையாட்டுகள் ஆப்பிள் ஐ.ஓ.எஸ் மற்றும் கூகுள் ஆன்ட்ராய்டு செல்பேசிகளில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது …

0 9

முகநூல் பக்கங்களில் பதியப்படும் தவறான பொய்ச் செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க அவதூறு தகவல்களை நீக்க வேண்டும் என உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முகநூலுக்கு கோரிக்கைகள் எழுந்தன. மேலும் சில நாடுகள் வெறுக்கத்தக்க பேச்சுகளை உடனடியாக நீக்கவில்லை எனில் முகநூலுக்கு தடை விதிக்கப்படும் எனவும் எச்சரித்தன. இதனை தொடர்ந்து கூடிய விரைவில் வெறுக்கத்தக்க பேச்சுகள் முகநூலில் இருந்து நீக்கப்படும் எனவும், அதற்கான சிறந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாகவும் முகநூல் அறிவித்தது. இந்நிலையில் கூடிய விரைவில் தங்கள் நாடு குறித்த …

0 9

உலகின் முன்னணி வீடியோ பொழுதுபோக்கு சேவை நிறுவனமான ’நெட்பிளிக்ஸ்’, பொழுதுபோக்கோடு தொடர்புடைய பல்வேறு வீடியோக்களை இலவசமாகவும், கட்டணமாகவும் வழங்கி வருகிறது. ஆனால் இந்த நிறுவனத்தின் வீடியோக்களை ஆன்லைனில் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் நமக்கு பிடித்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியாது. ஆனால் யு டியூப் தளத்தில் வீடியோக்களை ‘ஆஃப் லைன்’ வசதி மூலம் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். எனவே யு டியூபில் இருப்பது போல ஆஃப்லைனில் வீடியோக்களை பார்க்கும் வசதியை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் அறிமுகப்படுத்த …

0 16