Posts in category

இந்தியா


ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 10.35 மணிக்கு பினாகா ராக்கெட் ஏவப்பட்டதாகவும் அது வெற்றி பெற்றதாகவும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, நேற்று முன்தினம் சோதனை முயற்சியாக 2 முறை இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) கீழ் இயங்கி வரும், ரிசர்ச் சென்டர் இமாரட்தான் (ஆர்சிஐ) இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம் முதலில் தயாரித்த …

0 12

நியூயார்க் : உலகளவிலான அமைதிப்படை செயல்பாடுகளில் உயிர் தியாகம் செய்தவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைதிப்படை 70 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இந்த படைக்கு அதிகப்படியான வீரர்களை அனுப்பி வைத்திருக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இந்திய வீரர்கள் 6,693 பேர் அபேய், சிப்ரஸ், காங்கோ, ஹைதி, லெபனான், தெற்கு சூடான், மேற்கு சஹாரா ஆகிய இடங்களில் பணியாற்றி வருகின்றனர். தற்போது 96,000 வீரர்கள் ஐ.நா. அமைதிப்படையில் உள்ளனர். 15,000 அதிகாரிகளும், …

0 28

வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி சார்பாக ‘கிம்போ’ எனும் மெசேஜிங் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே பதஞ்சலி நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து, சுதேசி சம்ரிதி சிம் கார்டை அறிமுகப்படுத்திய நிலையில், அடுத்த கட்டமாக சுதேசி மெசேஜிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தஜராவாலா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சுதேசி சிம்கார்டை அறிமுகப்படுத்திய நிலையில், அடுத்த கட்டமார யோகா குருவின் பதஞ்சலி நிறுவனம் ‘கிம்போ’ எனும் மெசேஜிங் தளத்தை …

0 35

புதுடில்லி, ‘பொதுத் துறை நிறுவனங்களில், பணி நியமனத்தின் போது, திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி முறையில், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கும் வேலை அளிக்க வேண்டும்’ என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ‘பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்ற ஆட்களை தேர்வு செய்யும் போது, தொலைதுார மற்றும் திறந்தவெளி பல்கலையில் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை’ என, மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு புகார்கள் வந்தன.மனிதவள மேம்பாட்டுத் துறையில் இருந்து, பொதுத் துறை நிறுவன செயலருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது பல்கலை …

0 24

ஐக்கிய நாடுகள் சபை சார்பில் உள்ள அமைதிப்படையில் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளின் ராணுவ வீரர்கள், போலீஸார் பணியில் உள்ளனர். ஐ.நா.சபை அமைதிப் படையில் இப்போது 96 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். கடந்த 70 ஆண்டுகளில் அமைதிப் படையினரில் 3,737 பேர் தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் இறந்துள்ளனர். இவர்களில் இந்திய வீரர்கள்தான் அதிகம். இந்தியாவைச் சேர்ந்த 163 பேர் பணியின்போது இறந்துள்ளனர் என்பது குறி்ப்பிடத்தக்கது. ஐ.நா.சபையின் அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

0 19

அணு ஆயுத சோதனை கூடம் பிரிக்கப்படுவதைப் பார்வையிட சர்வதேச நிருபர்களுக்கு வடகொரியா அனுமதி அளித்தது. கடைசி நேரத்தில் தென் கொரிய நிருபர் களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதை அந்த நாடு வரவேற்றுள்ளது. தென் கொரியாவின் முயற்சியால், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் – அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இடையே ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், தென் கொரியா – அமெரிக்கா போர்ப் பயிற்சி கொரிய தீபகற்பத்தில் தொடங்கியது. இதற்கு …

0 13

அசிஸ்டென்ட் கமாண்டென்ட் பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள் : ஜெனரல் டியூடி, ஜெனரல் டியூடி (பைலட்) மற்றும் கமர்சியல் பைலட் என்ட்ரி ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. வயது : ஜெனரல் டியூடிக்கு 1994 ஜூலை 1 முதல் 1998 ஜூன் 30க்குள் பிறந்தவர்களும், ஜெனரல் டியூடி(பைலட்) பிரிவுக்கு 1994 ஜூலை 1 முதல் 2000 ஜூன் 30க்குள் பிறந்தவர்களும், கமர்ஷியல் பைலட் என்ட்ரிக்கு 1994 ஜூலை 1 முதல் 2000 ஜூன் 30க்குள் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். …

0 30

பெங்களூரு: கர்நாடக முதல்வராக, ம.ஜ.த., தலைவர், குமாரசாமி, பெங்களூரில் நாளை பதவியேற்கிறார். கர்நாடகாவில், சமீபத்தில் நடந்த தேர்தலில், பா.ஜ., 104, காங்., 78, ம.ஜ.த., 37 இடங்களை கைப்பற்றின. தனிப்பெருங்கட்சியான, பா.ஜ., சார்பில், முதல்வராக பதவியேற்ற, எடியூரப்பா, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன், பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, ம.ஜ.த., வுடன், காங்கிரஸ் இணைந்து, ஆட்சி அமைக்கவுள்ளது. முதல்வராக, ம.ஜ.த., வின் குமாரசாமி, நாளை பதவியேற்கிறார். இதற்காக, பல்வேறு மாநில கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0 20

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் தீவிர காய்ச்சலால் 9 பேர் பலியாகினர்.  அவர்களில் 2 பேருக்கு நிபா வைரஸ் தாக்கியிருந்தது கண்டறியப்பட்டது.  இதனை சுகாதார துறை உறுதி செய்துள்ளது.  இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் ஜோஸ் தலைமையில் இதனை தடுக்க பணி குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிபா வைரஸ் கடந்த 1998ம் ஆண்டு முதன்முறையாக மலேசியாவில் கண்டறியப்பட்டது.  அங்குள்ள மரங்களில் வாழ்ந்து வந்த பழங்களை தின்னும் ஒரு வகை வவ்வால்களால் இந்த வைரஸ் …

0 25

சீனா அரசு அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டி உள்ள பகுதியில் தங்கச் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த பகுதியில் சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான கனிம தாதுக்கள் நிறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா- சீனா இடையே  ‘டோக்லாம்’ பிரச்னையை அடுத்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது சீன எல்லையை ஒட்டிய பகுதியில் தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை சீனா துவங்கியுள்ளது. உட்கட்டமைப்பு பணிகளை அமைப்பதில் சீனா தீவிரம் காட்டி வருவதாக …

0 13