Posts in category

அறிவியல்


கணவாய் வழியே கருமேகங்கள் தென்மேற்குப் பருவமழை மேகங்களை, மேற்குத் தொடர்ச்சி மலை தடுத்துவிடுவதால், தமிழகம் மழை மறைவுப் பிரதேசம் ஆகிறது. எனினும் பாலக்காட்டு கணவாய் வழியே தப்பும் மேகங்கள் ஓரளவு மழையைத் தருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில், 30 கி.மீ., முதல் 40 கி.மீ அகலத்தில் அமைந்த இந்தக் கணவாய் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தையும் தமிழகத்தின் கோவை மாவட்டத்தையும் இணைக்கிறது. கேரளாவின் முதன்மையான வழித்தடமாக இந்த கணவாய் உள்ளது. பாலக்காட்டு கணவாய் வழியாக வீசும் குளிர்ந்த காற்று …

0 17

தாமரைப்பூ போலவே தாமரை தண்டும் மருத்துவ குணம் மிக்கது. இதனை தாமரைக்கிழங்கு என்றும் சொல்வர். கலோரிகள் மிகவும் அதிகம். நார்சத்து நிரம்பியவை. விட்டமின் சி, விட்டமின் பி 6, தாது உப்புகள் உள்ளன. தண்டை பச்சையாகவும் சாப்பிடலாம். இதயத்தை வலுவாக்கும். எந்த தாமரை, எந்த தண்ணீரில் இருந்தாலும் மாசுபடுவதில்லை. அதைப்போல் சமைக்கும் போது உப்பு போட்டாலும் தாமரைத்தண்டில் உப்பு ஏறுவதில்லை. காஷ்மீரில் தாமரைத்தண்டினை, ‘நந்த்ரு’என்பர். வதக்கல் மற்றும் பக்கோடா செய்வர். மூலநோயை குணப்படுத்த இலங்கையில் மருந்தாக பயன்படுத்துகின்றனர்.

0 14

பழங்கால அறிவியல்: நிலத்தடி நீரை அறிய, பாரம்பரிய அறிவியலில் பல வழிமுறைகள் உள்ளன. மனையில் புற்கள் அதிகம் வளர்ந்திருந்தால், அங்கு நிலத்தடி நீர் அதிகமாம். பால் சுரக்கும் பசுக்கள் எங்கே மேய்ந்தாலும் நிலத்தடி நீர் உள்ள இடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்து தான் அசை போடும். எறும்புகள் தானியங்களை சேமிக்கும் இடத்தில் நிலத்தடி நீர் அதிகம் இருக்குமாம். மருத மரம் உள்ள பகுதிகளில் கண்டிப்பாக நிலத்தடி நீர் இருக்கும். நாவல் மரத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சுவையான நிலத்தடி …

0 21

கடலில் கி.மீ கணக்கில் கச்சா எண்ணெய் கசிந்து விட்டால், அது ஒரு செயற்கைப் பேரிடர் என்று தான் சொல்ல வேண்டும். ‘மீனுக்கு பங்கமில்லை, கடலில் கொட்டப்பட்ட பெட்ரோலிய திரவம், கடலடி நீரோட்டத்தினால், பல நுாறு கி.மீ., தொலைவுக்கு பரவித் தொலையும். கடலோர மணலில் எண்ணெய் படிந்து, பல ஆண்டுகளுக்கு நச்சுத் தன்மையை வீசிக் கொண்டிருக்கும். இந்த பேராபத்தை விரைவில் தீர்க்க, சில வேதியல் முறைகள், வலைகள், நானோ துகள்கள் போன்றவை முன்வைக்கப்படாலும், உயிரியல் முறைகளே செம்மையானவையாக இருக்கும் …

0 18

நோய்க்கிருமிகளிடமிருந்து நம்மைக் காக்க வந்தவை தான் ஆன்டிபயாடிக் மருந்துகள். இருந்தும் பெரும்பாலான ஆன்டிபயாடிக் மருந்துகள், எதிர்பார்க்குமளவுக்கு நோய்களை தடுப்பதில்லை. ஏனெனில், பெரும்பாலான ஆன்டிபயாடிக் மருந்துகளை எதிர்த்து தொற்றுக்களை பரப்பும் உத்திகளை தில்லாலங்கடி பாக்டீரியாக்கள் கற்று விட்டது தான் காரணம். எனவே, என்ன செய்தால் இந்த தீய பேக்டீரியாக்களை அழிக்கலாம் என, மருத்துவ உலகம் ஆராய்ந்து வருகிறது. நுண்ணிய பாக்டீரியாக்களின் உடலிலேயே தொற்றிக்கொள்ளும் கில்லாடி வைரஸ் ரகங்கள் இருப்பது, 1915 ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. பாக்டீரியோபேஜ் வைரஸ் எனப்படும் இந்த …

0 17

  ‘ஜெட் பேக்’ கருவியை முதுகில் கட்டிய படி, ஒருவர் மட்டும் வானில் பறந்து சாகசம் செய்வது, ‘பிளை போர்ட்’ பறக்கும் பலகை மீது ஏறி நின்று, அந்தரத்தில் சவாரி செய்வது போன்றதாகும். கை, கால்களில் ஜெட் இயந்திரங்களை அணிந்து, நினைத்த திசையில் வீர்ரென்று பாயும், ஹாலிவுட்டின், அயர்ன்மேன் படத்தில் வருவது போன்ற கற்பனைகளை நிஜமாக்க, சில துணிச்சல்காரர்கள் முயன்று வருகின்றனர்; அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் பிரவுனிங்  கண்டுபிடிப்பாளர், சிறிய ஜெட் …

0 24

ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செயற்கை குவி ஆடி ஒன்றை உருவாக்கியுள்ளனர். வெறும், 30 மைக்ரான் அளவே உள்ள இந்த குவி ஆடி, மனித கண்களில் குவி ஆடி தசையால் இயக்கப்படுவதைப் போலவே இயங்குகிறது.ஒளிப்படக்கருவி, தொலைநோக்கி, நுண்நோக்கி, போன்றவற்றில் பலவித ஆடிகளை வரிசையாக கொண்டு ஒளியை குவியச் செய்வர். இப்படி பல ஆடிகளை வைக்கும் போது, உள்ளே வரும் ஒளிக் கற்றைகள் பாதிப்படைந்து, அவை திரையில் உருவாக்கும் தோற்றம் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.ஆனால், ஹார்வர்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த …

0 11

பேட்டரி பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்.  பேட்டரி பொதுவாக ஜின்க், மக்னீசியம், மெர்குரி போன்ற வேதிப் பொருட்களால் தான் இது உருவாகப்படுகின்றது. இது போன்ற பேட்டரிகளால் சுற்றுசூழல் மிகவும் பாதிப்பு அடைகின்றது. இதைத் தடுக்கும் விதமாக சமீபத்தில்  பேப்பர் பேட்டரிகள் கண்டுபிடித்து இருக்கின்றார்கள். இதுவரை உலோகத்தை பயன்படுத்தாமல்  பேட்டரியை உருவாக்க முடியாது என்கிற நிலைமை இருந்தது. ஆனால் தற்போது முழுக்க முழுக்க  பேப்பர்பேட்டரியை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.இதனை Swedenன் உப்சலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி திரு.மரியா …

0 15

சர்வதேச விண்வெளி நிலையங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், விண்வெளி வீரர்கள் உடனடியாக பூமிக்கு திரும்ப ஆபத்துகால விண்கலன்களை நிறுத்தி வைக்க நாசா முடிவெடுத்துள்ளது. தற்போது வரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் எந்த பிரச்சனையும் இல்லாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை செய்ய நாசா விரும்புகிறது. விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்கள், பல்வேறு உடல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும், அவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டால், சிகிச்சைக்காக பூமிக்கு திரும்ப இது போன்ற உதவி விண்கலன்கள் தேவை என நாசா தெரிவித்துள்ளது. தற்போதைக்கு …

0 14

நாசாவின் காசினி விண்கலம், தனது இறுதிப்பயணத்தை சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டனுக்கு இன்று மேற்கொள்ள இருக்கிறது. இதன்படி இன்று டைட்டன் துணைக்கோளின் மேற்பரப்பில் இருந்து சுமார் 979 கிலோ மீட்டர் தொலைவில், மணிக்கு 21,000 கி.மீட்டர் வேகத்தில் கெசினி கடந்து செல்லும். இந்த பயணத்தின் போது, சனிக்கோளின் வட துருவப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் ஏரிகள் மற்றும் கடல்கள் இருக்கின்றனவா? என்ற ஆராய்ச்சியை காசினி விண்கலம் மேற்கொள்ள உள்ளது. இந்த ஆராய்ச்சியின் போது சனிக்கோளின் மேற்பரப்பை, …

0 18