நிர்வாக மோசடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்ட தனியார் உட்கட்டமைப்பு நிறுவனம் ஐ.எல் &; எஃப்.எஸ். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட பி.எஃப் மற்றும் ஓய்வூதியத் திட்டங்களின் பணத்தில் சுமார் 15,000 முதல் 20,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பொதுமக்கள் குறிப்பாகச் சம்பளதாரர்களை அதிகம் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஐ.எல் &; எஃப்.எஸ் என்றழைக்கப்படும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லீஸிங் அண்டு ஃபைனான்ஷியல் சர்வீசஸ் (IL&;FS) என்ற தனியார் நிறுவனம், இந்தியாவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத மிகப்பெரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமாகும். எல்.ஐ.சி, ஜி.ஐ.சி, யு.ஐ.ஐ மற்றும் என்.ஐ.சி உள்ளிட்ட நான்கு பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து, உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு நிதிச் சேவை அளித்துவரும் தொழிலில் பிரதானமாக ஈடுபட்டு வந்தது. சாலைகள், ரயில்வே பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், தொழிற்ச..

0 0