விகடன் போஸ்ட்: ‘சூப்பர் டீலக்ஸ்’ கதை, கார்ப்பரேட் ‘கட்சிப் பணி’, கரு.பழனியப்பன் பகடி


சூப்பர் டீலக்ஸ்… யார் புலி? யார் பாம்பு?

";கதை எழுத ஏன் இவ்வளவு காலம் தேவைப்பட்டது?";

"; 'ஆரண்ய காண்டம்' படத்தோட ஒன்லைனை ரெண்டுநாள்ல முடிச்சிட்டேன். இந்தப் படத்தோட ஒன்லைன் எழுத ஒரு வாரம் தேவைப்பட்டது. இதுக்கு இடையில ஒரு விளம்பரப்பட வேலை வந்ததால் நலன், நீலன் கிட்ட 'கதை எழுதித் தரமுடியுமா'ன்னு கேட்டிருந்தேன். ஓகே சொன்னாங்க. மிஷ்கின்கிட்டயும் கேட்டிருந்தேன். அவரும் எழுதுறேன்னு சொன்னார். ஆனா, அவங்க மூணு பேரும் மீட் பண்ணிக்கவே இல்லை. ஒரு போர்ஷன் மட்டும் மிச்சம் இருந்தது. அதை நானே எழுதிட்டேன். ஒருத்தருக்கு மத்தவங்க என்ன கதை எழுதினாங்கன்னு தெரியாது, படம் இதைத்தான் பேசப்போகுதுன்னு மட்டும் தெரியும். எல்லாக் கதையும் வந்தபிறகு, நான் பைனல் டிராப்ட் எழுதினேன். அதுக்கு அஞ்சு மாசம் ஆகிடுச்சு.";

";தியாகராஜன் குமாரராஜா யார்?";

";சொந்த ஊர் சென்னைதான். ஒரு கூட்டத்துல ஆவரேஜான ஆள் ஒருத்தன் இருப்பான்ல, அது நான்தான்! இப்போ சினிமாவுல இயக்குநரா வேலை பார்த்துக்கிட்டிருக்கேன்.";

– ஒரே ஒரு படம்தான் இயக்கியிருக்கிறார். ஆனாலும் தியாகராஜன் குமாரராஜா பற்றித் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறாமல் இருக்குமா? 'சூப்பர் டீலக்ஸ்' குறித்து உற்சாகத்துடன் பேசிய தியாகராஜன் குமாரராஜாவின் 'சூப்பர் டீலக்ஸ்… யார் புலி? யார் பாம்பு?' எனும் ஆனந்த விகடன் பேட்டியை முழுமையாக வாசிக்க…

>; ஆனந்த விகடன் இதழை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க:

தலைவர்கள் இங்கே உருவாக்கப்படுகிறார்கள்!

அம்மையப்பன் எனும் சொல்லுக்குள் அகிலத்தையே ஆனைமுகன் அடக்கியதைப் போல, புராஜெக்ட் எனும் சொல்லுக்குள் அனைத்தையும் அடக்கிவிடும் கார்ப்பரேட். அவர்களுக்கு ஸ்டாலின் ஒரு புராஜெக்ட். அன்புமணி ஒரு புராஜெக்ட். அவ்வளவே! சமூகநீதியோ, சுயாட்சியோ, சாதி ஒழிப்போ, மொழி மேம்பாடோ, அவர்களுக்கு அவசியமில்லை. தேர்தல் நேரத்தில், மக்கள் முன்னால் ஒரு நாயகனை உருவாக்கி நிறுத்துதல் மட்டுமே அவர்களின் பணி…

மாற்றம் முன்னேற்றத்திற்குப் பின்னிருந்த குழுவுடன் சம்பந்தப்பட்ட ஒருவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. அப்போது அவர் அடிக்கடி சொன்ன சொல்… 'பொசிஷனிங்!' அதென்ன பொசிஷனிங்? ";தலைவர்கள் இரண்டு வகை. `Vertical' தலைவர்கள், 'Horizontal' தலைவர்கள். காந்தி, அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் முதல் வகையில் வருவார்கள். மோடி, அன்புமணி போன்றவர்கள் இரண்டாம் வகை"; என்றார். அதை எளிதாக இப்படி விளங்கிக்கொள்ளலாம்… `vertical' தலைவர்கள் என்பவர்கள் கனியைப்போல பூத்து, காய்த்து, பழுத்து உருவாகுபவர்கள். ஆனால், 'Horizontal' தலைவர்கள் என்பவர்கள், ஊதப்படும் பலூன்கள்…

– தமிழ்நாட்டில் 2016 சட்டமன்றத் தேர்தல். கார்ப்பரேட்டுகள் அதிகாரபூர்வமாகக் கட்சிகளுக்குப் பணிசெய்ய ஆரம்பித்த தேர்தலாகவும் இருந்தது. அப்போது இரண்டு கட்சிகள், கார்ப்பரேட் பாணி அரசியலை முன்னெடுத்தன. ஒன்று தி.மு.க, மற்றொன்று பா.ம.க. ஸ்டாலினுக்கும் அன்புமணிக்கும் பின்னால் அரசியல் மேலாண்மையைத் தொழிலாகச் செய்யும் இரண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் இருந்தன. இதை முன்வைத்து, கட்சிகளுக்குள் கார்ப்பரேட்டுகள் வருவது தொடர்பாக ஆழமான பார்வையை செலுத்தும் 'தலைவர்கள் இங்கே உருவாக்கப்படுகிறார்கள்!' எனும் ஆனந்த விகடன் சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க

>; ஆனந்த விகடன் இதழை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க:

ஸ்ரீநிதியின் பிரசார ஆலோசனை!

சிவகங்கை தொகுதியில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் மீது வழக்குகள் இருப்பதால், அவரின் மனைவி ஸ்ரீநிதி போட்டியிடப்போகிறார் என்ற செய்தியும் பரவியது. ஆனால், அதை கார்த்தி சிதம்பரம் மறுத்துவந்தார். இந்த நிலையில், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் காரைக்குடியில் நடந்தது. அதில் கலந்துகொண்ட ஸ்ரீநிதி, சமூகவலைதளங்களில் தேர்தல் பிரசாரம் செய்வது எப்படி என்றும், வாட்ஸ்அப் குரூப் பிரசாரம் குறித்தும் நிர்வாகிகளுக்கு வகுப்புகளை எடுத்துள்ளார். மானகிரியில் உள்ள இல்லத்தில் மகிளா காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை, தனித்தனியாகச் சந்தித்து தேர்தல் நிலவரம் குறித்தும் ஆலோசனை செய்துள்ளார் ஸ்ரீநிதி.

– இதேபோல் 'தலையெடுத்த ஓ.பி.எஸ். மகன்', 'ராமநாதபுரத்தில் ஆளுக்கு ஒரு கூட்டம்', 'திருச்சியில் திரண்ட மஞ்சள் படை!' 'வாரிசு அரசியலில் ஈரோடு அ.தி.மு.க!' 'உற்சாகத்தில் ஈ.வி.கே.எஸ் ஆதரவாளர்கள்!' 'திருநாவுக்கரசர் அப்சட்' என வரிசை கட்டும் ஜூனியர் விகடனின் 'எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்' சிறப்புச் செய்தித் தொகுப்பை முழுமையாக வாசிக்க

>; ஜூனியர் விகடன் இதழை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க:

பா.ஜ.க-மீது இருப்பது வெறுப்பல்ல… அச்சம்!

";ரஜினி, வந்தா ராஜாவாதான் வருவேன் என்பதுபோல், 'நாடாளுமன்றத் தேர்தல் வேண்டாம், சட்டமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம்' எனக் கூறிவிட்டார். கமலோ, மத்திய அரசையோ காங்கிரஸையோ விமர்சிக்காமல், மாநிலக் கட்சிகளை மட்டும் விமர்சித்துவிட்டு, நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களம் காண்கிறார். அதனாலேயே அவர்மீது சந்தேகம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை…";

";யாராவது என்னிடம், 'பல வேலைகளைச் செய்ய எப்படி நேரத்தைத் திட்டமிடுகிறீர்கள்' எனக் கேட்டால், அதற்குக் கருணாநிதியைத்தான் கைகாட்டுவேன். நம் கண் முன்னே ஒருவர் 70 ஆண்டுகளுக்கும் மேல் நாள்தோறும் காலை முதல் நள்ளிரவு வரை அரசியல், இலக்கியம், பத்திரிகை என ஓய்வில்லாமல் உழைத்தார். அவரைப் பார்த்தால் இப்படி ஒரு கேள்வியே யாருக்கும் தோன்றாது…";

";இந்தியாவில், எந்தக் கட்சியும் தேசியக் கட்சி இல்லை. எல்லாமே பிராந்தியக் கட்சிகள்தாம். காஷ்மீர் முதல் தமிழகம்வரை அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெறும் திறன் உள்ள கட்சி என ஒன்றைக் காட்டுங்கள். ஒரு பகுதியில் உங்கள் கட்சி ஹீரோ என்றால், இன்னொரு மாநிலத்தில் காமெடியன்தான். அப்படி இருக்கும் நிலையில், இங்கு எதுவுமே தேசியக் கட்சி இல்லை…";

– எந்தக் கேள்வியாக இருந்தாலும் அதற்கான பதிலை தனக்கே உண்டான பகடியுடன் விளக்கும் இயக்குநர் கரு.பழனியப்பனின் ";பா.ஜ.க-மீது இருப்பது வெறுப்பல்ல… அச்சம்!"; எனும் ஆனந்த விகடன் நேர்காணலை முழுமையாக வாசிக்க

>; ஆனந்த விகடன் இதழை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க:

காட்டுத் தீ… சாம்பலாகப் போவது நாம்தான்!

";இந்தியா முழுவதும் ஏற்படும் காட்டுத் தீயில் 99 சதவிகிதம் மனிதர்களின் தவற்றால்தான் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த விபத்தில் வனவிலங்குகள் உயிரிழக்கவில்லை என்று வனத்துறையினர் கூறுகின்றனர். ஆனால், ஏராளமான பல்லுயிர்களும், பறவைகளும் தீயில் கருகி சாம்பலாகிவிட்டன. இவை அழிவதன் மூலம், கொசுக்கள் அதிகளவு உருவாகித் தொற்றுநோய்கள் பரவும். புவி வெப்பமயமாதலால், மழை குறைந்து தண்ணீர்ப் பிரச்னை ஏற்படும். தண்ணீர்ப் பிரச்னை ஏற்பட்டால் மனிதர்களின் வாழ்வாதாரமே முடங்கிவிடும். எனவே, இதைச் சாதாரணப் பிரச்னையாகக் கருதாமல் அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கையாள வேண்டும்…";

– குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் கருகி 23 பேர் உயிரிழந்த சம்பவம், கடந்த ஆண்டு நாட்டையே அதிர வைத்தது. நடப்பாண்டில் பந்திப்பூர், முதுமலை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி என்று மேற்குத் தொடர்ச்சி மலையெங்கும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த முறை லட்சக்கணக்கான நாட்டு மரங்களும், மூலிகைகளும், புற்களும் சாம்பலாகி உதிர்ந்துகொண்டிருக்கின்றன. இதன் பின்னணியையும் விளைவுகளையும் தெளிவுபட பதிந்த 'காட்டுத் தீ… சாம்பலாகப் போவது நாம்தான்!' எனும் ஆனந்த விகடன் சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க

>; ஆனந்த விகடன் இதழை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க:

விஞ்ஞானியாக மாறிய குஜராத் விவசாயி!

1943-ஆம் ஆண்டு நாட்டு ரகமாக இருந்த கேரட்டை குஜராத் விவசாயிகள் விளைவித்து மாட்டுக்குத் தீவனமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அப்போது கேரட்டை உணவுக்காகப் பயன்படுத்தும் வழக்கம் அங்கு இல்லை. அதுவொரு மாட்டுத்தீவனமாக அறியப்பட்டிருந்ததே ஒழிய யாரும் சாப்பிட்டு உணவுக்குப் பயன்படுத்தியவர்கள் இல்லை. ஆனால், வல்லபபாய் 'தன் அப்பாவிடம் இதை ஏன் நம் உணவுக்குப் பயன்படுத்தக்கூடாது' என்று கேட்டுள்ளார். அந்தக் கேள்வியை அவரது அப்பா நிராகரித்துள்ளார். ஆனால், தன்னுடைய ஆர்வத்தைக் குறைத்து கொள்ளாத வல்லபபாய், கால்நடைகள் சாப்பிடும்போது மனுஷன் ஏன் சாப்பிடக்கூடாது என்று எண்ணி கேரட்டுகளை மூட்டைப் பிடித்துச் சந்தையில் கொண்டு போய் விற்பனை செய்துள்ளார். நகரத்து மக்கள் இதை விரும்பி வாங்கி இருக்கின்றனர். தொடர்ந்து கேரட்டுகளைச் சந்தைக்குக் கொண்டு போய் விற்பனை செய்ய, கேரட் மூலம் வருமானம் உயர ஆரம்பித்தது. இதனால், கேரட்டை மட்டுமே 2 ஏக்கருக்கு விதைத்து உற்பத்தியைப் பெருக்கி உள்ளார்.

– குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 96 வயதாகும் வல்லபபாய், அம்மாநிலத்தில் இருந்த நாட்டு ரக கேரட்டிலிருந்து மாதுவன் காஜர் (Mathuvan Gajar) என்றொரு கேரட் ரகத்தைக் கண்டுபிடித்துள்ளார். அவர் குறித்து பசுமை விகடனின் வெளியாகியுள்ள சிறப்புக் கட்டுரை, புத்தாக்கத்தில் ஈடுபடுவோருக்கு உத்வேகம் பாய்ச்சவல்லது. 'பாரம்பர்ய கேரட் வாங்கித் தந்த பத்மஸ்ரீ விருது… விஞ்ஞானியாக மாறிய குஜராத் விவசாயி!' எனும் அந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்க

>; பசுமை விகடன் இதழை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க:

மோண்டியால்… என்ன மாதிரியான பைக்?

பெயருக்கு ஏற்றபடியே அவர்கள் கொஞ்சம் குழப்பவாதிகள்தான். தாங்கள் வழக்கத்திலிருந்து மாறுபட்டவர்கள் என்பதைக் காட்டுவதற்காக, எந்த எல்லைக்கும் போவார்கள்! ஹிப்ஸ்ட்டர் பாணி பைக்குகள், தற்போது மீண்டும் மார்க்கெட்டுக்குள் வரத் தொடங்கி விட்டன என்பது, அவர்களுக்கான மிகப்பெரிய ப்ளஸ். FB மோண்டியால் (FB Mondial) நிறுவனத்தின் HPS 300 என்ற பைக் அதில் ஒன்று. பைக்கின் பெயரிலேயே ஹிப்ஸ்ட்டர் ஒளிந்திருக்கிறது.

கடந்த 2014-ம் ஆண்டில் மறு அறிமுகமான இந்த நிறுவனம் வடிவமைத்த முதல் கான்செப்ட் பைக்தான் இங்கே நீங்கள் பார்ப்பது. 70 ஆண்டு பின்னணியைக்கொண்ட FB மோண்டியாலின் நிறுவனர்களே, தமது பைக்குகள் சீனாவில் தயாரிக்கப்பட்டு உலகெங்கும் விற்பனை செய்யப்படும் எனக் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள்! வித்தியாசமான பெயருடன் வித்தியாசமானவர்களுக்காக களமிறங்கி இருக்கும் இந்த பைக்கில் என்ன ஸ்பெஷல் என்பதை கச்சிதமாக விவரிக்கும் 'மோண்டியால்… என்ன மாதிரியான பைக்?' எனும் மோட்டார் விகடனின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை முழுமையாக வாசிக்க

>; மோட்டார் விகடன் இதழை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க:

படிப்புக்கு நடுவே ஒரு பிரேக்!

* தேர்வுக் காலத்தில் குழந்தைகள் படிப்பைத் தவிர வேறு எதைப் பற்றியும் நினைத்துப் பார்க்கக் கூடாது என்று பெற்றோர் நினைக்கிறார்கள். அப்படிச் செய்வதால், குழந்தைகள் தேர்வு சார்ந்த கடும் அழுத்தத்துக்கு ஆளாவார்களே தவிர, அவர்களால் நிறைய மதிப்பெண் பெற முடியாது. அதனால் குழந்தைகள் அவ்வப்போது இடைவெளிவிட்டுப் படிக்க அனுமதிக்க வேண்டும்.

* விளையாட்டு, ஓவியம் என எதிலும் ஆர்வம் காட்டாமல் எப்போதும் படித்துக்கொண்டே இருக்கும் குழந்தைகளைவிட, ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டு படிப்பிலும் கவனம் செலுத்தும் குழந்தைகளின் அகாடமிக் திறன், சிறப்பாக இருப்பதாக உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், சிறிது நேரம் விளையாடிவிட்டுப் படிக்க அமர்ந்தால் குழந்தைகள் பாசிட்டிவ்வாக உணர்வார்கள். ஓர் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். உடல், மனரீதியாகக் கிடைக்கும் இந்த உற்சாகம் கொடுக்கும் தூண்டுதலால் அவர்கள், மிகச் சிறப்பாகத் தங்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்…

– `ஓய்வே எடுக்காமல் தொடர்ந்து படித்தால்தான் தேர்வில் நிறைய மதிப்பெண் பெற முடியும்' என்கிற எண்ணம் பெரும்பாலான பெற்றோரிடம் காணப்படுகிறது. “அதில் உண்மை எதுவும் இல்லை'' என்கிறார் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசகர் நளினி சந்திரசேகரன். தேர்வு சார்ந்து அவர் தரும் பயனுள்ள ஆலோசனைகளை 'படிப்புக்கு நடுவே ஒரு பிரேக்!' எனும் அவள் விகடன் கட்டுரையில் முழுமையாக வாசிக்க

>; அவள் விகடன் இதழை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க:

விகடன் ஃப்ளாஷ்பேக் (5/04/2014 ) : ஹீரோ திருமா… சந்தர்ப்பவாதி ராமதாஸ்! – வெடிக்கும் ஜான் பாண்டியன்

''திருமாவளவன் பற்றி?''

''தம்பி திருமா ஒரு போராளி. வட மாவட்டங்களில் ஹீரோவாகவே அவரைப் பார்க்கிறார்கள். நான் சிறையில் இருந்த காலத்தில் அவர் நன்றாக வளர்ந்திருக்கிறார். இந்த நேரத்தில் ராமதாஸ் பற்றியும் நான் சொல்லியாக வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் மனநிலையும் இன்னும் அவருக்கு வரவில்லை. தான் ஒரு சந்தர்ப்பவாதி என்பதை அடிக்கடி ராமதாஸ் நிரூபித்து வருகிறார். சாதிக் கட்சி தொடங்கி, அரசியல் கட்சியாக வளர்ந்து மீண்டும் அதை சாதி கட்சியாக மாற்றிவிட்டார் இந்த டாக்டர். அவரை நம்பிப்போனால் நடு ஆற்றில் நிற்க வேண்டியதுதான்!''

– 2014 தேர்தல் சூழல்களை பின்னோக்கிப் பார்த்தபோது கிட்டிய பேட்டியில் ஜான் பாண்டியன் சொன்னவை. காலத்தால் ஏற்படும் மாற்றங்களையும், மாற்றமின்றி மாறாதிருப்பவையும் குறித்த பார்வையை இதுபோன்ற பேட்டிகளில் கண்டறியலாம். அந்த வகையில், 5/04/2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த 'ஹீரோ திருமா… சந்தர்ப்பவாதி ராமதாஸ்!' எனும் ஜான் பாண்டியன் பேட்டியை முழுமையாக வாசிக்க

>; ஜூனியர் விகடன் இதழை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க:

>; விகடனின் 11 இதழ்களையும், உங்களுக்கான சிறப்புச் சலுகையுடன், சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க:

Original Article

Previous `பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதெல்லாம் என்ன நடந்தது?’ ஒரு இன்ஃபோகிராப் பயணம்! #VikatanInfographic
Next மலிவு விலை மருந்துக்கடை; பிரதமர் மோடி பெருமிதம்

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *