‘வாட்ஸ் ஆப்-ல்’ பண பரிவர்த்தனை விரைவில்!!!


பேஸ்­புக் நிறு­வ­னம், இந்­தாண்டு பிப்­ர­வ­ரி­யில், ‘வாட்ஸ் ஆப் – பே’ என்ற பெய­ரில், சோதனை அடிப்­ப­டை­யில், பணப் பரி­வர்த்­தனை சேவையை துவக்­கி­யது.10 லட்­சத்­திற்­கும் அதி­க­மா­னோர், இச்­சே­வையை பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

இதை­ய­டுத்து, அடுத்த வாரம், வாட்ஸ் ஆப் – பே நிறு­வ­னம், அதி­கா­ர­பூர்வ டிஜிட்­டல் பணப் பரி­வர்த்­தனை சேவையை துவக்க உள்­ளது. இதற்­காக, எச்.டி.எப்.சி., – ஐ.சி.ஐ.சி.ஐ., மற்­றும் ஆக்­சிஸ் வங்­கி­க­ளு­டன், வாட்ஸ் ஆப் – பே ஒப்­பந்­தம் செய்­துள்­ளது.வாட்ஸ் ஆப் – பே வரு­கை­யால், ஏற்­க­னவே டிஜிட்­டல் பணப் பரி­வர்த்­தனை சேவை­யில் ஈடு­பட்­டுள்ள, ‘கூகுள்’ நிறு­வ­னத்­தின், ‘தேஸ்;’ அலி­பாபா பெரு­ம­ளவு முத­லீடு செய்­துள்ள, ‘பேடி­எம்’ ஆகி­யவை, கடும் போட்­டியை சந்­திக்­கும் நிலை ஏற்­படும்.

இந்­நி­று­வ­னங்­க­ளி­டம், வாட்ஸ் ஆப் போன்ற, சமூக வலை­தள பய­னா­ளி­கள் இல்லை என்­பதே இதற்கு கார­ணம்.இந்­தி­யா­வில், 20 கோடி பேர், வாட்ஸ் ஆப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். இது, அமெ­ரிக்கா மக்­கள் தொகை­யில், 20 சத­வீ­தம் ஆகும்.  பேடி­எம் மூலம் டிஜிட்­டல் பணப் பரி­வர்த்­த­னை­யில், தின­மும் ஈடு­ப­டு­வோரை விட, வாட்ஸ் ஆப் பயன்­ப­டுத்­து­வோர் எண்­ணிக்கை, 20 மடங்கு அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.இத­னால், வாட்ஸ் ஆப் – பே நிறு­வ­னம், டிஜிட்­டல் பணப் பரி­வர்த்­த­னை­யில் மிக வேக­மாக வளர்ச்சி காணும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

Previous மலேசியா, சிங்கப்பூர் பிரதமர்களுடன் மோடி சந்திப்பு !!
Next சென்னையில் "BMW" கார் தயாரிப்பு துவக்கம்!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *