சென்னையில் “BMW” கார் தயாரிப்பு துவக்கம்!!


இந்­தி­யா­வில் முதன் முத­லாக, ‘பி.எம்.டபிள்யு., மினி கன்ட்­ரி­மேன்’ கார் தயா­ரிப்பை துவக்­கி­யுள்­ளது.

இந்­நி­று­வ­னத்­தின், தலை­வர் விக்­ரம் பவா, சென்னை அருகே, சிங்­க­பெ­ரு­மாள்­கோ­வி­லில் உள்ள தொழிற்­சா­லை­யில், கார் தயா­ரிப்பை சென்னை தொழிற்­சா­லை­யில், இரண்­டாம் தலை­மு­றை­யைச் சேர்ந்த, ‘மினி கன்ட்­ரி­மென்’ கார் தயா­ரிக்­கப்­ப­டு­கிறது.

இந்­தி­யா­வில், பி.எம்.டபிள்யு., வர­லாற்­றில், புதிய அத்­தி­யா­யம். கடந்த ஆண்டு, ‘மினி’ மாடல் கார் விற்­பனை, 17 சத­வீ­தம் உயர்ந்து, 421ஆக அதி­க­ரித்­துள்­ளது. இந்­தாண்டு, விற்­ப­னையை இரு மடங்கு அதி­க­ரிக்க திட்­ட­மிட்­டுள்­ளோம்.

பெட்­ரோ­லில் இயங்­கும், ‘மினி கன்ட்­ரி­மேன்’, மாடல்­க­ளுக்கு, 34.90 லட்­சம் ரூபாய் மற்­றும், 41.40 லட்­சம் ரூபாய் ஆக­வும், டீசல் காருக்கு, 37.40 லட்­சம் ரூபாய் என­வும், விலை நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

இவற்­றின் விற்­பனை, ஜூன் மாதம் துவங்­கும் என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.ஜெர்­ம­னி­யைச் சேர்ந்த, பி.எம்.டபிள்யு., நிறு­வ­னத்­தின் துணை நிறு­வ­ன­மாக, பி.எம்.டபிள்யு., குரூப் உள்­ளது. இந்­நி­று­வ­னம், ‘மினி’ பிரி­வில், ஐந்து மாடல்­களில் கார்­களை விற்­பனை செய்­கிறது. இவற்­றில், ‘மினி கன்ட்­ரி­மேன்’ மட்­டும், சென்­னை­யில் தயா­ரிக்­கப்­ப­டு­கிறது.

Previous ‘வாட்ஸ் ஆப்-ல்’ பண பரிவர்த்தனை விரைவில்!!!
Next 99.3 சதவீத செல்லாத ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பியதாக அறிவிப்பு

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *