ஏமனில் 3 இந்தியர்கள் உட்பட 11 பேர் பலி!!!


ஏமனில் மெகுனு சூறாவளி தாக்கியதில் 11 பேர் பலியாகினர். இதில் 3 பேர் இந்தியர்கள். ஆவர். மேலும் இந்தத் சூறாவளி தாக்குதலில் பலர் காணாமல் போகியுள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

மெகுனு சூறாவளி தொடர்பாக ஏமன் ஊடகங்கள், ”ஏமனின் தோபர் மற்றும் அல் வுஸ்தா ஆகிய மாகாணங்களில் வெள்ளிக்கிழமை மெகுனு சூறாவளி தாக்கியது.  சுமார் 170 கிலோமீட்டர் தூரத்தில் காற்று வீசியது.

இந்த சூறாவளியில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர். அதில் மூன்று பேர் இந்தியர்கள். மேலும் இந்த சூறாவளியில் பலர் காணாமல் போகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. சுமார் 60,000 பேர் சூறாவளி தாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்துள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏமனில் நிவாரண பணிகள் விரைவாக  நடந்து வருவதாக மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்ரு ஏமன் அரசு கேட்டுக் கொண்டுள்ளது

Previous இலங்கை வெள்ளத்தில் 11 பேர் பலி!!!!
Next ரூ.20 லட்சத்துக்கு விலைபோன முலாம் பழங்கள்!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *