முதல்வராக குமாரசாமி நாளை பதவியேற்பு!!


பெங்களூரு:

கர்நாடக முதல்வராக, ம.ஜ.த., தலைவர், குமாரசாமி, பெங்களூரில் நாளை பதவியேற்கிறார். கர்நாடகாவில், சமீபத்தில் நடந்த தேர்தலில், பா.ஜ., 104, காங்., 78, ம.ஜ.த., 37 இடங்களை கைப்பற்றின.

தனிப்பெருங்கட்சியான, பா.ஜ., சார்பில், முதல்வராக பதவியேற்ற, எடியூரப்பா, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன், பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, ம.ஜ.த., வுடன், காங்கிரஸ் இணைந்து, ஆட்சி அமைக்கவுள்ளது. முதல்வராக, ம.ஜ.த., வின் குமாரசாமி, நாளை பதவியேற்கிறார்.

இதற்காக, பல்வேறு மாநில கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Previous பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!!!
Next விண்ணில் செலுத்தப்பட்டது சீனாவின் கியூகியோ செயற்கைக்கோள்!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *