இந்திய எல்லையில் தங்க சுரங்கத்தை அமைக்கிறது சீனா!!


சீனா அரசு அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டி உள்ள பகுதியில் தங்கச் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த பகுதியில் சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான கனிம தாதுக்கள் நிறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா- சீனா இடையே  ‘டோக்லாம்’ பிரச்னையை அடுத்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது சீன எல்லையை ஒட்டிய பகுதியில் தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை சீனா துவங்கியுள்ளது. உட்கட்டமைப்பு பணிகளை அமைப்பதில் சீனா தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  சுரங்கம் அமையவுள்ள பகுதியில், தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பு மிக்க கனிமங்கள் இருப்பதாகவும், அதன் மதிப்பு சுமார் 4 லட்சம் கோடி வரை இருக்கும் என்று அந்நாட்டு பத்திரிகை செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி- சீன அதிபர் இருவருக்குமிடையேயான சந்திப்பை அடுத்து பிரச்னை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous செல்வம் நிறைந்த வளர்ச்சி நாடுகளில் இந்தியா 6வது இடம்!!!!
Next கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் 9 பேர் பலி

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *