‘கூகுள்’ ராணுவத்துக்கு உதவுவதாக பணியாளர்கள் எதிர்ப்பு!


வேவு பார்க்க உதவும் ஒளிப்படக் கருவிகொண்ட ஓட்டுனரின்றி பறக்கும், ‘ட்ரோன்’ வாகனத்தை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது அமெரிக்க ராணுவம். இதை தயாரித்துத் தர கூகுள் ஒப்பந்தம் செய்துள்ளது.

‘புராஜக்ட் மேவன்’ என்ற இத்திட்டத்தில் கூகுள் பங்கேற்கக் கூடாது என கூகுளில் பணியாற்றும், 4,000 பேர் கூட்டாக மனுவை அளித்தனர். ஆனால், கூகுள் அதை நிராகரித்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில பணியாளர்கள் வேலையிலிருந்து விலகினர்.

ஏற்கனவே ராணுவத்தில் ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்த தடை கோரி, சர்வதேச விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்கள் குழு, ஐ.நா., சபையில் மனு அளித்துள்ளனர். அதே கமிட்டியை சேர்ந்த பிரபல விஞ்ஞானிகள், தற்போது, புதிய திறந்த மனுவை கூகுளுக்கும் எழுதியுள்ளனர்.

Previous எபோலா வைரஸ்சால் காங்கோவில் 23 பேர் பலி!!!!
Next செவ்வாயில் பறக்கும் பதிய ஹெலிகாப்டர்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *