காவிரி மேலாண்மை திட்டத்தை மத்திய அரசு நேற்றும் தாக்கல் செய்யவில்லை!!!


  • கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் காரணமாக காவிரி வழக்கு விசாரணை தாமதமடைந்து வருகிறது.
  • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதை 6 வாரங்களுக்குள் அமைக்காமல் காலம் தாழ்த்திய மத்திய அரசு 6 வது வார முடிவில் ‘ஸ்கீம் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு இழுத்தடித்து வருகிறது. .
  •  கர்நாடக அரசு சார்பில் காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘‘தமிழகத்திற்கு எங்களால் காவிரி நீரை திறந்து விட முடியாது.
  •  கையெழுத்திட வேண்டியத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவைக்கு அனுப்ப முடியவில்லை என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
  • ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் கர்நாடகாவில் தேர்தல் நடப்பது குறித்து எங்களுக்கு அக்கறை இல்லை. எதிர்வரும் 8ம் திகதிக்குள் மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் உடனடியாக தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும், இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என எச்சரித்தது.
  • காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படவில்லை. கர்நாடக தேர்தல் காரணமாக வரைவு திட்டம் பற்றி முடிவெடுக்க முடியவில்லை. அதனை தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் கால அவகாசம் தேவை என மத்திய அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
  •  மத்திய நீர்வளத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை எதிர்வரும் 14ம் திகதிக்கு ஒத்தி வைத்தனர். கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ளது. இந்காரணமாக த சூழ்நிலையில் வழக்கு விசாரணை 14ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • கர்நாடகாவின் மனுவை தொடர்ந்து தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் “கர்நாடக அணைகளில் தற்போது 19 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அதில் 4 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும். கால தாதமம் இன்றி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
Previous பாதுகாப்பில்லாத காஷ்மீர் சுற்றுலாப் பயணி கல்வீச்சில் உயிரிழப்பு!!!
Next புதுப்பிக்கட்ட விண்டோஸ் 10ஐ பயன்படுத்துவது எப்படி? சிம்பிள் டிப்ஸ்!!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *