ஐபிஎல்: ப்ளேஅப் சுற்றில் வாய்ப்பு யாருக்கு?


ஐபில் கிரிக்கெட் தொடர் தற்பொது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் ப்ளேஅப் சுற்றுக்கு தகுதி பெற கடுமையாக முயற்சித்து வருகின்றன. இதில் ஒவ்வொரு அணிக்கும் ப்ளேஅப் வாய்ப்பு எப்படி என்று பார்ப்போம்.

புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடத்தில் உள்ள ஹைதராபாத், சென்னை, பஞ்சாப் அணிகள் ப்ளேஅப் சுற்றுக்கு முன்னேறுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது. ஏனெனில் ஹைதராபாத் அணி 9 போட்டிகளில் 7 ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே 16 புள்ளிகளுடன் ப்ளெஅப் சுற்றுக்கு முன்னேறிவிடலாம்.

இதில் இரண்டாம் இடத்தில் உள்ள சென்னை அணி 10 போட்டிகளில் 7 ல் வென்று 14 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளில் 1 போட்டியில்  வென்றாலே ப்ளேஅப் சுற்றுக்கு தகுதி பெறலாம். மூன்றாம் இடத்தில் உள்ள பஞ்சாப் அணி 9 போட்டிகளில் 6 ல் வென்று 12 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளில் 2 ல் வென்றாலே ப்ளேஅப் சுற்றை உறுதி செய்யலாம்.

முதல் மூன்று இடத்திற்கு எவ்வித சிக்கலும் இல்லையென்பதால், அடுத்த இடமான நான்காம் இடத்திற்கு 4 அணிகள் போட்டியில் உள்ளன. இதில் போட்டியில் உள்ள நான்கு அணிகளுக்கும் சமமான வாய்ப்புகள் உள்ளது. நேற்று நடந்த மும்பை, கோல்கத்தா போட்டியில் கோல்கத்தா வென்றிருந்தால் சாதாரனமாக இருந்திருக்கும். மாறாக மும்பை வென்றதால் தொடரில் சுவாரசியம் அதிகரித்துள்ளது. பஞ்சாப் ராஜஸ்தான் ஆட்டத்தில் பஞ்சாப் வென்றதால் அதன் ப்ளேஅப் வாய்ப்பு பிராகாசமான உள்ளது.

இதில் டெல்லி அணி தான் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. 10 போட்டிகளில் 3 ல் வென்று 7 ம் இடத்தில் உள்ளது. மீதமிருக்கும் 4 போட்டிகளில் அனைத்திலும் சென்றால் கூட 14 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும். அப்படி 14 புள்ளிகள் பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தான் உள்ளது.

புள்ளிப்பட்டியலில் தற்போது 4 ம் இடத்தில் உள்ள கோல்கத்தா அணிக்கு ப்ளேஅப் சுற்றுக்கு 4 ம் இடத்தில் தகுதிபெற அதிக வாய்ப்புள்ளது. கோல்கத்தா அணி 10 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமிருக்கும் 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெல்ல வேண்டும். மற்ற அணிகள் அனைத்து போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பொது கோல்கத்தா அணி ஒரு போட்டியில் தோற்றாலும் ப்ளேஅப் வாய்ப்பில் நீடிக்கும் என்பது அந்த அணிக்கு ஆறுதலான ஒன்று.

எப்படி இருந்தாலும் மும்பை, பெங்களூர், ராஜஸ்தான், கோல்கத்தா இந்த நான்கு அணிகளில் ப்ளேஅப் சுற்று 4 ம் இடத்தை பிடிக்கபோவது எந்த அணி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Previous அமெரிக்காவில் தமிழ் பள்ளி மாணவர்கள் சுற்றுலா!!!
Next 115 நர்ஸ் பணியிடங்கள் புதுச்சேரி ஜிப்மரில்!!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *