சந்தை நிலவரம்- வெயில் சீசனில் விற்பனையாகும் பழங்கள்


சென்­னை­யில் கோடை சீச­னுக்­கான பழங்­களின் வரத்து அதி­க­ரிக்­கத் துவங்­கி­யுள்­ளது. தர்­பூ­சணி, கிர்­ணிப்­ப­ழத்தை தொடர்ந்து, மாம்­ப­ழம், நாவல் பழங்­களின் வரத்து அதி­க­ரித்­துள்­ளது. சில்­லரை விலை­யில், மாம்­ப­ழத்­தில், பங்­க­னப்­பள்ளி, 1 கிலோ, 110 ரூபாய்; ஜவ்­வாது, அல்­போன்சா, 1 கிலோ 130 ரூபாய்; இமாம்­ப­சந்த், 1 கிலோ, 180 ரூபா­யாக விற்­ப­னை­யா­கின்றன.
தர்­பூ­சணி, 1 கிலோ, 15 ரூபா­யா­க­வும், கிர்ணி, 1 கிலோ, 30 ரூபா­யா­க­வும் உள்ளன. காஷ்­மீர் ஆப்­பிள், ஆரஞ்சு, விதை­யில்லா திராட்சை சீசன் முடி­யும் நிலை­யில் உள்­ளன. ஆப்­பி­ளில் வாஷிங்­டன் ஆப்­பிள் மட்­டுமே பர­வ­லாக விற்­ப­னைக்கு வந்­துள்­ளது. இவை, 1 கிலோ, 160 – 200 ரூபா­ய்க்கு விற்கப்படுகின்றன. மால்டா ஆரஞ்சு, 1 கிலோ, 80 – 100 ரூபா­யாக உள்­ளது.
விதை­யில்லா திராட்சை, 1 கிலோ, 150 ரூபா­யா­க­வும், பன்­னீர் திராட்சை, 1 கிலோ, 100 ரூபா­யா­க­வும் உள்ளன. கொய்யா, 60 – 70 ரூபா­யா­க­வும், சாத்­துக்­குடி, 80 ரூபா­யா­க­வும் உள்ளன. பலாப்­ப­ழம், 1 கிலோ, 40 – 50 ரூபா­யாக விற்­ப­னை­யா­கிறது.வாழைப்­ப­ழத்­தில் மலை­வாழை, 1 கிலோ, 130 – 150 ரூபா­யாக விற்­ப­னை­யா­கிறது. செவ்­வாழை, 60 ரூபா­யா­கும். நேந்­தி­ரம், பூம்­ப­ழம், ரஸ்­தாளி உள்­ளிட்­டவை, 1 கிலோ, 50 ரூபா­யாக உள்ளன.

தற்­போது சீசன் ஆரம்­பித்­துள்ள நாவல் பழம், 1 கிலோ, 250 ரூபா­யாக உள்­ளது. ஆஸ்­தி­ரே­லியா திராட்சை, அமெ­ரிக்க பிளம்ஸ் உள்­ளிட்­டவை, 1 கிலோ, 300 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கின்றன. மாதுளை, 1 கிலோ, 160 – 180 ரூபா­யாக உள்­ளது. சீனா­வில் இருந்து வரும் டிரா­கன் பழம், 1

Previous நல்ல லாபம் தரும் பருத்தி, மல்லி, பாகற்காய்!!!!
Next தேங்காய் பருப்பு விலை சரிவு!!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *