விரைவில் விமானங்களில் செல்போன் சேவை….


 விரைவில்  விமான பயணிகளுக்கு செல்போன் சேவை மற்றும் இண்டர்நெட் சேவையை அளிப்பது தொடர்பான பரிந்துரைக்கு தொலைத்தொடர்பு கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் இத்தகைய சேவை அளிக்க சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொலைத் தொடர்புத் துறையில் மிகவும் உயரிய அமைப்பாகத் திகழும் தொலைத்தொடர்பு கமிஷன், டிராய் பரிந்துரைத்த இன்டர்நெட் டெலிபோன் சர்வீசஸ் சேவைக்கும் அனுமதி அளித்துள்ளது.

இதேபோல தொலைத் தொடர்பு சேவை தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடுவரை நியமிப்பது என்ற யோசனைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்புத்துறைச் செயலர் அருணா சுந்தரராஜன் தெரிவித்தார்.

குறைதீர்ப்பு பிரதிநிதி அமைப்பது தொடர்பாக டிராய் சட்டத்தில் உரிய திருத்தங்களை கொண்டு வர வேண்டியுள்ளது. ஒரு காலாண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு கோடி புகார்கள் வருகின்றன. குறைதீர்ப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட, திருப்திகரமான சேவை அளிக்க வழி ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Previous (புரளி) பிஎன்பி வங்கிக்கணக்குகள் முடக்கம்!
Next 7நாட்கள் மின்சார ரயில்கள் ரத்து!!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *