மிக விரைவில் உலகின் முதல் 5ஜி ஹூவாய் ஸ்மார்ட்போன்!!


  • ஹூவாய் நிறுவனத்தின் 2018 சர்வதேச அனலிஸ்ட் நிகழ்வு ஷென்சென் நகரில் துவங்கியுள்ளது. இவ்விழாவில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
  • 2019-ம் ஆண்டு 5ஜி சந்தை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் 2019 மூன்றாவது காலாண்டு வாக்கில் ஹூவாய் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
  •  ஹூவாய் சமீபத்தில் அறிமுகம் செய்த மேட் 20 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ஹூவாய் மேட் 30 அந்நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் அந்நிறுவனத்தின் சொந்த 5ஜி மோடெம் பயன்படுத்தப்பட இருக்கிறது. 
  • ஹூவாய் நிறுவனம் தனது பலொங் 5G01 சிப்செட்-ஐ சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்திருந்தது. இந்த சிப்செட் 2.3 Gbps அளவு பேன்ட்வித் வழங்கு்ம திறன் கொண்டதாகும். புதிய பலொங் சிப்செட் அளவை வைத்து பார்க்கும் போது இவை மொபைல் ஹாட்ஸ்பாட், தானியங்கி கார்களில் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இத்துடன் முழுமையான 5ஜி சேவையை வழங்கவும் ஹூவாய் திட்டமிட்டுள்ளது. நுகர்வோருக்கு 5ஜி வன்பொருள் தயாரானதும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உபகரணங்களை வழங்கும் என கூறப்படுகிறது.
  • 2025-ம் ஆண்டு வாக்கில் சுமார் 110 கோடி 5ஜி இணைப்புகள் இருக்கும் என்றும் 20 கோடி இணைக்கப்பட்ட கார்கள் பயன்பாட்டில் இருக்கும் என ஹூவாய் எதிர்பார்க்கிறது.
Previous இந்தியாவில் மே 11-ல் ஆப்பிள் வாட்ச் 3!!!!
Next தேயிலை வணிகத்தினை ஊக்குவிக்க நிதி ஒதுக்க தேயிலை உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *