இந்தியாவில் மே 11-ல் ஆப்பிள் வாட்ச் 3!!!!


ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் (ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார்) மாடல் மே மாதம் 11-ம் தேதி இந்தியாவில் வெளியாகும் என ஆப்பிள் அறிவித்துள்ளது.
முன்னதாக ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் ஸ்டான்டர்டு வெர்ஷன் வெளியான நிலையில் தற்சமயம் செல்லுலார் மாடல் வெளியிடப்பட இருக்கிறது. ஏர்டெல் வலைத்தளத்தில் புதிய ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் சாதனத்தை மே 4-ம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏர்டெல் மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ வலைத்தளத்திலும் மே 4-ம் தேதி முதல் ஆப்பிள் வாட்ச் 3 முன்பதிவு துவங்குகிறது. இதன் விற்பனை ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோ ஸ்டோர்களில் மே 11-ம் தேதி முதல் துவங்குகிறது.
புதிய ஆப்பிள் வாட்ச் 3 குறித்து இதெல்லாம் தெரியுமா?
  ஆப்பிள் வாட்ச் 3 செல்லுலார் கனெக்டிவிட்டி அம்சம் ஐபோன் 6 மற்றும் அதன்பின் வெளியிடப்பட்ட ஐபோன் மாடல்களுடன் மட்டுமே வேலை செய்யும். இசிம் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் வாட்ச் 3 எந்நேரமும் அருகில் இருக்கும் ஐபோனுடன் இணைந்திருக்கும்.
ஐபோனினை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டால், புதிய வாட்ச் 3 கொண்டு அழைப்புகள், மியூசிக் உள்ளிட்ட சேவைகளை வாட்ச் – கொண்டே பயன்படுத்த முடியும். இசிம் கனெக்டிவிட்டி கொண்டிருப்பதால் புதிய வாட்ச் 3 கையில் மினி ஐபோன் போன்று வேலை செய்யும்.
– ஜியோவின் இந்த சேவை ஐபோன் பயனர்களுக்கும் எவ்வித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. இத்துடன் முன்பதிவு செய்வோருக்கு முதல் நாளிலேயே விநியோகம் செய்வதாகவும் ஜியோ அறிவித்துள்ளது.
– ஏர்டெல் சார்பிலும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் 3 செல்லுலார் மாடலில் ஏர்டெல் சேவைகளை ஆக்டிவேட் செய்ய முதலில் தங்களது ஐபோனினை ஐஓஎஸ் 11.3 மற்றும் வாட்ச் ஓஎஸ் 4.3 இயங்குதளங்களுக்கு அப்டேட் செய்ய வேண்டும்.  இனி ஐபோனின் செட்டிங்ஸ் — ஜெனரல், — அபவுட் சென்று புதிய கேரியர் செட்டிங்களை தேர்வு செய்ய வேண்டும்.
ஆப்பிள் வாட்ச் 3 இ-சிம் பயன்படுத்தும் என்பதால், தனியாக பிரத்யேக சிம் தேவைப்படாது. ஜியோ அறிவித்திருக்கும் ஜியோஎவ்ரிவேர்கனெக்ட் (JioEverywhereConnect) சேவையை கொண்டு ஒரே ஜியோ நம்பரை கொண்டு ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் பயன்படுத்த முடியும்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனத்தில் அப்கிரேடு செய்யப்பட்ட டூயல் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் 70% வரை வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய W2 வயர்லெஸ் சிப் 85% வரை வேகமான வைபை இணைப்பை வழங்கும். இத்துடன் 50% வரை சீரான ப்ளூடூத் கனெக்டிவிட்டி, வாட்டர் ரெசிஸ்டண்ட் பாடி, 18 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும்.
இந்தியாவில் புதிய ஆப்பிள் வாட்ச் 3 செல்லுலார் மாடலின் விவை அறிவிக்கப்படாமல் உள்ளது. வெளியீட்டுக்கு முன் இதன் விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Previous microsoft windows 10 updates april10
Next மிக விரைவில் உலகின் முதல் 5ஜி ஹூவாய் ஸ்மார்ட்போன்!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *