சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் கற்கள் வீடுகட்ட தேவைப்படும்!


போக்குவரத்து துறையில் புரட்சிகளை படைத்து வரும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், அண்மையில் போரிங் கம்பெனி என்ற புதிய நிறுவனத்தை துவங்கியுள்ளார். எதற்கு… பூமிக்கு அடியில் சுரங்கங்களை தோண்டி, அதில் அதிவேக காந்த ரயில்களை அனுப்பும், அவரது திட்டத்திற்காகத் தான்.
சுரங்கம் தோண்டும் கருவிகள், மிகவும் செலவு பிடித்தவையாக இருப்பதால், அவரே, ‘தி போரிங் கம்பெனி’யை துவங்கி, சுரங்கம் தோண்டும் இயந்திரங்களையும் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்.
சுரங்கம் தோண்டும் போது, பெரும் பாறைகளை அகற்ற வேண்டி இருக்கிறது. அவை வீணாக கருதப்பட்டு, சமவெளிகளில் நிரவி விடப்படுவது தான் வழக்கம். ஆனால், மஸ்க் புதுமையாக யோசிப்பவர்.
பூமிக்கடியில் வெட்டப்படும் பெரும் பாறைகளில் இருந்து, கட்டடங்கள் கட்டுவதற்கு ஏற்ற கற்களை தெரிந்து, விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறார், மஸ்க். அதுமட்டுமல்ல, சுரங்கம் தோண்டும்போது கிடைக்கும் பல அரிய வகை கற்களை, சிற்பங்கள் வடிக்க விரும்புவோருக்கும் விற்பனை செய்யப் போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.
வீடு கட்டும் கற்கள், ஒன்றோடு ஒன்று கச்சிதமாக பொருந்தும் வகையில் வடிவமைக்கப்படும் என்பதால், இரண்டு பேர், ஒரு சிறிய வீட்டை ஓரிரு நாட்களில் கட்டி விட உதவும் என்கிறார் மஸ்க்.
Previous படர்தாமரை வராமல் தடுக்கும் வழிமுறைகள்
Next பாக்டீரியாவையே கொல்லும் புதிய வைரஸ்கள்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *