எல்லா கிராமங்களுக்கும் மின்சார இணைய வசதி!!!


உலகெங்கும் பல கோடி மக்களுக்கு மின் வசதி எட்டவில்லை. அதே அளவுக்கு  பல
கோடி பேருக்கு இணைய வசதியும் கிடைக்கவில்லை.
என்றாலும் இந்த காலத்தில்  இணைய வசதி கட்டாயமானதாகும். மின்சாரமும் இணைய
வசதியும் மனிதனின்  அடிப்படை உரிமையாக கருதப்படுகிறது. இந்த காலத்தில்
இந்த நிலையை மாற்ற, பல சமூக ஊடகங்கள்  மற்றும் பல்வேறு வர்த்தக
நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இதில் ‘கும்பயா’ என்ற நிறுவனமும், ‘ஜீரோ
எக்செஸ்’ என்ற கருவி மூலம், மின் மற்றும் இணைய வசதி இல்லாதோருக்கு வழங்க
திட்டமிட்டுள்ளது.ஜீரோ எக்செஸ் கருவி, 120 வாட் உற்பத்தி திறன் கொண்ட
சூரிய ஒளித் தகடு மூலம் இயங்குகிறது. இந்த கருவியின் மூலம் உள்ளூர்
வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும்,பொழுதுபோக்கு
நிகழ்ச்சிகளையும்,உலக உண்மைகளையும் இணையத்தின் வழியாக பெற முடியும். இதன்
மூலம் விவசாயம், சுகாதாரம், சத்துணவு, போன்ற பல தலைப்புகளில், தகவல்களை
தொலைதுார கிராமங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.அதேபோல, இங்குள்ள
மக்கள், இக்கருவியைக் கொண்டு பணப் பரிவர்த்தனையையும் செய்ய
முடியும்.சூரிய மின்சாரம் மற்றும் இணைய வசதி மூலம், சிறு கிராமங்களுக்கு
நவீன பொருளாதாரத்தையும், பல்துறை அறிவையும் கொண்டு வர முடியும் என்பதால்
ஜீரோ எக்செஸ் கருவியை மலிவு விலையில், கிடைக்க திட்டமிட்டுள்ளது.
பள்ளிகூடங்கள்  இல்லாத கிராமங்களில்,இணைய வசதி இருந்தால் மாணவர்கள்
பயன்பெறுவார்கள்.

Previous குழந்தைகள் விளையாடும் பொம்மையில் உருவாகும் கிருமிகள்!
Next     காகிதத்தால் உருவான பேட்டரி

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *