சாப்பிட்டதும் உறக்கம் வருவது எப்படி?


நீங்கள் நிம்மதியாக வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் ஓய்வாக இருந்தால்போதும் உறக்கம் உங்களைத் தழுவிக் கொள்ளும். சாப்பிட்டதும் உறக்கம் வருவது ஏனென்று தெரியுமா?.

உணவு உண்டதும் செரிமானம் தொடங்குவதால், ரத்த ஓட்டம் உணவு மண்டலத்தை நோக்கி அதிகமாகிறது. இந்த வேளையில் இரப்பை, முன் சிறுகுடல் பகுதியில் அதிக ரத்த  ஓட்டம் இருக்கும். மூளைக்குச் செல்லவேண்டிய ரத்தம்கூட திசை திருப்பப்படுகிறது.

இதனால் உடல் அளவில் அசதி ஏற்படுகிறது. தூக்கமும் செரிமானத்திற்கு துணை புரியும் என்பதால் தூக்கமும் தொற்றுகிறது. மதிய உணவுக்குப் பின் சிறிது நேரம் உறங்கும் பழக்கம், உலகம் முழுவதும் பரவலாகி இருக்கிறது.

Previous கனடாவில் 16-வது உலகத் தமிழிணைய மாநாடு!
Next எப்படி சாப்பிட்டாலும் சத்து - வேர்க்கடலை

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *