மங்கோலியா தனது முதல் விண்கலத்தை ஏவி சாதனை படைத்துள்ளது..!


Sriharikota: Space agency Indian Space Research Organisation (ISRO) successfully launch a record 104 satellites, including India’s earth observation satellite on-board PSLV-C37/Cartosat2 Series from the spaceport of Sriharikota on Wednesday. PTI Photo / ISRO(PTI2_15_2017_000099B)

நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் பொருளாதார ஆதாரங்களை பெருக்கும் வகையில், தன்னுடைய முதல் விண்கலத்தை மங்கோலிய நாடு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த 1227 மெகா ஹெர்ட்ஸ் திறனுடைய செயற்கைகோளுக்கு, மங்கோல் சாட்-1 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த செயற்கைகோள் மூலம், மங்கோலியா தனது நாட்டின் தொலைக்காட்சி ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு ஆகியவற்றை மேம்படுத்த முடியும். இந்த செயற்கைகோளானது ஆசிய தொலைத்தொடர்பு செயற்கைகோள் எனப்படும், ஆசியாவில் தொலைத்தொடர்பு வசதிகளை அளிக்கக்கூடிய அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைகோளுக்கு ஆன செலவு, செயற்கைகோள் ஏவப்பட்டது ஆகியன குறித்த எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இந்த செயற்கைகோள் குறித்த வீடியோ ஒன்று மட்டுமே, அந்நாட்டின் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

”இந்த திட்டமானது 10 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்டது. தற்போது அந்த முயற்சி வெற்றியடைந்துள்ளது. இது ஒரு சரித்திர புகழ் வாய்ந்த நிகழ்வு. விண்வெளியில் முதன் முதலாக செயற்கைகோளை செலுத்தியதில் மங்கோலியா பெருமையடைகிறது.” என மங்கோலிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தொலைதொடர்பு மட்டுமல்லாமல் விண்வெளி ஆராய்ச்சி, வரைபட உருவாக்கம் மற்றும் இயற்கை பேரிடர்களை கணித்தல் ஆகிய பணிகளுக்காகவும் இந்த செயற்கைகோள் பயன்படுத்தப்பட உள்ளது.

நன்றி:

Mongolia launches its first satellite, diversifies resource dependent economy

Previous டெலகிராமின் புதிய குரல் குறுஞ்செய்தி வசதிக்கு ஈரான் தடை..!
Next கணினியிலிருந்து வெளியாகும் வெப்பத்தை மாற்று சக்தியாக உருவாக்கும் கருவி..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *