டெலகிராமின் புதிய குரல் குறுஞ்செய்தி வசதிக்கு ஈரான் தடை..!


என்னாப்பு போன்ற செயல்பாடுகளை கொண்ட டெலகிராம் குறுஞ்செயலி, கடந்த வாரம் பாதுகாக்கப்பட்ட குரல் குறுஞ்செய்தி (என்கிரிப்டட்) வசதியை தனது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த வசதி ஈரான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே, அந்நாட்டு அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

”ஈரானின் இந்த தடை குறித்து எங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை. ஏன் இந்த தடை விதிக்கப்பட்டது என்பது குறித்து தற்போது வரை எங்களுக்கு காரணம் தெரியவில்லை. ஆனால் எங்களைப் போல சேவை அளித்து வரும் மற்ற குறுஞ்செய்தி குறுஞ்செயலிகள், அந்நாட்டில் எந்த தடையுமின்றி செயல்பட்டு வருகின்றன. இந்த தடை மூலம் டெலகிராம் குறுஞ்செயலியை மட்டும் ஈரான் அரசு குறி வைத்து தடை செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது.” என டெலகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மற்ற தகவல் தொடர்பு சேவைகளான முகநூல், என்னாப்பு, ஸ்கைப் போன்றவை எந்த தடையுமின்றி ஈரானில் இயங்கி வருகின்றன. ஈரானில் என்னாப்பு அழைப்புகளுக்கு தடை இல்லை. ஆனால் டிவிட்டர், முகநூல் போன்றவற்றை வி.பி.என் இணைய இணைப்பு மூலமாக மட்டுமே பயன்படுத்த முடியும்.

ரகசிய குறுஞ்செய்தி வசதியை அளிப்பதால், டெலகிராம் ஈரானில் பிரபலமாக உள்ளது. ஈரானில் உள்ள அரசின் கெடுபிடிகளுக்கு மத்தியில், ரகசியமாக செய்திகளை பறிமாறிக் கொள்ள டெலகிராம் மிகவும் உதவியாக இருப்பதாக அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர். மேலும் சாதாரண தொலைபேசி அழைப்புகளைப் போல, டெலகிராமில் பறிமாறப்படும் செய்திகளை யாரும் இடைமறிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானில் டெலகிராமிற்கு 40 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

நன்றி:

Telegram’s new audio messaging feature blocked in Iran

Previous ”மேக் இன் இந்தியா” திட்டத்தை எதிர்த்து சீனா மிரட்டல்..!
Next மங்கோலியா தனது முதல் விண்கலத்தை ஏவி சாதனை படைத்துள்ளது..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *