400 சிசி பைக்கை அறிமுகப்படுத்த உள்ள பஜாஜ் நிறுவனம்..!


7-bajaj

இந்தியாவின் பஜாஜ் நிறுவனம் 400 சிசி என்ஜின் திறனுள்ள ”பல்சர் சி.எஸ் 400” பைக்கின் உற்பத்தியை துவங்கியுள்ளது. இந்த பைக்கானது அடுத்த மாத மத்தியில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதன் விலை 1.5 லட்சத்திலிருந்து 1.7 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஜாஜ் நிறுவன தயாரிப்புகளிலேயே இதுதான் அதிக என்ஜின் திறன் கொண்டதாகும். கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் இந்த பைக்கை பஜாஜ் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. ஆனால் தற்போதுதான் அந்த பைக்கின் உற்பத்தியை துவங்கியுள்ளது. மேலும் இந்த பைக்கிற்கு அதிகாரப்பூர்வ பெயர் ஏதும் வைக்கப்படவில்லை. அடுத்த மாதம் இந்த பைக் அறிமுகப்படுத்தப்படும் போதுதான், அதன் பெயரும் அறிவிக்கப்படும்.

ராயல் என்பீல்ட் ரக பைக்குகளுக்கு அடுத்ததாக அதிக சிசி திறன் கொண்ட பைக்குகளுக்கு இந்தியாவில் ஒரு வெற்றிடம் காணப்படுகிறது. அந்த வெற்றிடத்தை பஜாஜ் நிறுவனத்தின் இந்த 400 சிசி பைக் போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் வடிவமைப்பானது ”துகாதி” பைக்கை முன்மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் நிரப்புமிடம் மற்றும் முகப்பு விளக்கு ”பல்சர் 200” பைக்கை முன்மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் முதன்முறையாக இந்த பைக்கில் எல்.ஈ.டி முகப்பு விளக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுவரை வேறு எந்த பஜாஜ் பைக்குகளிலும் இந்த வகை முகப்பு விளக்கு இணைக்கப்பட்டதில்லை. பிரபல கே.டி.எம் பைக்கில் உள்ளது போல திரவ எரிபொருள் குளிர்ச்சி தொழில்நுட்பம், ஒரு சிலிண்டர் இன்ஜின் ஆகிய அம்சங்கள் இந்த பைக்கிலும் உள்ளன. இதில் ஆறு கியர்கள் உள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வசதி உள்ளது. பல புதிய வசதிகளை கொண்டிருப்பதால், இந்திய பைக் பிரியர்களிடையே பஜாஜின் இந்த புதிய பைக் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி:https://www.zigwheels.com/news-features/news/bajaj-400cc-bike-launch-in-december-production-started/26904/

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..

Previous இந்திய ஏ.டி.எம்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புகள் அதிகமாம்..!
Next மூன்று மாதங்களில் 20 லட்சம் திறன்பேசிகளை விற்றுள்ள ஜியோமி நிறுவனம்..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *