விண்வெளி ஆராய்ச்சியில் களமிறங்கும் பெல்ஜியம்..!


4-belgium

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா உட்பட சில நாடுகள் மட்டுமே தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. மீதமுள்ள நாடுகள் விண்வெளி தொழில்நுட்பத்தில் மற்ற நாடுகளை சார்ந்திருக்கின்றன. தங்கள் நாடுகளில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளை கூட, வேறு நாடுகளின் ராக்கெட் மூலம் அந்த நாடுகளில் விண்வெளியில் நிலை நிறுத்தி வருகின்றன.

இந்நிலையில் பெல்ஜியம் நாடு அடுத்த ஆண்டு தனது நாட்டுக்கென விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. The Interfederal Space Agency of Belgium (ISAB) என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் செயல்படத் துவங்கும் என பெல்ஜியம் தெரிவித்துள்ளது.

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடாக உள்ள பெல்ஜியம், ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம் பயன்பெற்று வருகிறது. ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளுடன் விண்வெளி ஆராய்ச்சியில் போட்டியிட, தனி ஆராய்ச்சி அமைப்பு வேண்டும் என அந்த நாடு கருதுகிறது. மேலும் இதன்மூலம் தனது வியாபார வாய்ப்புகளையும், தொழில்நுட்ப வசதிகளையும் அதிகரிக்க முடியும் என அந்நாடு நம்புகிறது.

இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் மூலம் எந்த மாதிரியான ஆராய்ச்சிகளில் பெல்ஜியம் ஈடுபட உள்ளது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. நாட்டுக்கென பிரத்யேக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை துவங்குவதற்கு, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பெல்ஜியம் முன்மாதிரியாக மாறியுள்ளது. பெல்ஜியத்தின் இந்த புதிய திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால், மேலும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், தங்களுக்கென தனி விண்வெளி ஆராய்ச்சி அமைப்பை துவங்கு முயற்சி எடுக்கலாம் என கூறப்படுகிறது.

நன்றி:http://indianexpress.com/article/technology/science/belgium-to-set-up-space-agency-next-year-join-space-race-4395918/

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..

Previous இணைய வர்த்தகம் காரணமாக சரிவை சந்தித்துள்ள விற்பனை நிலையங்கள்..!
Next அடுத்த ஆண்டு பிக்சல் திறன்பேசியின் விற்பனை அதிகரிக்கும்..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *