2022-ல் 5ஜி சேவையை 550 மில்லியன் பேர் பெறுவார்கள்-எரிக்சன் தகவல்..!


1-ericsson

ஸ்வீடனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் உலகின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான எரிக்சன், சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்றை வெளியிட்டது. இதன்படி வரும் 2022-ஆம் ஆண்டு செல்பேசி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 6.1 பில்லியனாக அதிகரிக்கும் எனவும், 5ஜி இணைய சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 550 மில்லியனாக இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டு 5ஜி இணைய இணைப்பை உலகில் செல்பேசி பயன்படுத்துவர்களில் 25 சதவீதம் பேர் கொண்டிருப்பார்கள் எனவும், அவற்றில் 25 சதவீத இணைப்புகள் வட அமெரிக்காவில் இருந்தும், ஆசிய பசுபிக் நாடுகளில் 10 சதவீதம் பேர் 5ஜி சேவையை பெற்றிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022-ஆம் ஆண்டு செல்பேசி பயன்படுத்துபவர்களில் 95 சதவீதம் பேர் 4ஜி அல்லது 5ஜி இணைப்புகளை பெற்றிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது செயல்வடிவம் பெற்று வரும் 5ஜி இணைய வசதி, வரும் 2020-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவலாக்கப்படும் எனவும் அப்போது 4ஜி மற்றும் 5ஜி மட்டுமே பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் இணைய வசதியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் சுமார் 84 மில்லியன் புதிய வாடிக்கையாளர்கள் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் மட்டும் புதிதாக 15 லட்சம் பேர் புதிய தொலைத்தொடர்பு எண்ணை பெற்றுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 14 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது.

இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் செல்பேசிகள் மூலமாக வீடியோ காட்சிகளை பார்ப்பது 50 சதவீதம் அதிகரிக்கும் எனவும் எரிக்சனின் புள்ளிவிபரத்தில் தெரியவந்துள்ளது. இது மொத்த செல்பேசி இணையப்பயன்பாட்டில் 75 சதவீதமாக இருக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களை பார்வையிடுதல் ஆண்டுதோறும் 39 சதவீதம் வரை வளருமாம்.

சமூக வலைத்தளங்கள், தகவல்கள் தேடுதல் ஆகியவற்றை விட நேரடி ஒளிபரப்புகளை இணையம் வழியாக பார்ப்பதற்கே செல்பேசி பயனாளர்கள் அதிகம் விரும்புகின்றனராம். இந்தியாவில் உள்ள ஐந்தில் இரண்டு திறன்பேசி பயனாளர்கள் நேரடி ஒளிபரப்பை இணையம் மூலமாக கண்டுகளிக்கவே விரும்புகின்றனர். இதேபோல் ஓமன், இந்தோனேஷியா, பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த ஆர்வம் அதிகரித்து வருகிறதாம்.

செல்பேசிகளை தவிர கணினிகளில் பெறப்படும் இணைய இணைப்பானது தற்போது 18 பில்லியன் என்ற எண்ணிக்கையை விட, 2022-ஆம் ஆண்டு 29 பில்லியனாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/550mn-users-to-be-connected-to-5g-networks-by-2022-ericsson-mobility-report-349705.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..

Previous இந்தியாவிற்கு எதிரான சீனாவின் மூவகை வியூகமும் அதற்குப் பலியாகும் ஈழத்தமிழரும் : பகுதி – 2
Next உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை அளிக்க உள்ள செல்பேசித் துறை..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *