வங்கிச்சேவையை துவங்கியுள்ள ஏர்டெல் நிறுவனம்..!


4-airtel-bank

இந்திய தொலைதொடர்புத்துறையில் பல்லாண்டு காலமாக முன்னணியில் இருந்து வரும் ஏர்டெல் நிறுவனம், தற்போது வங்கிச் சேவையிலும் களமிறங்கியுள்ளது. கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு வங்கிக் கணக்கு என்பது மிகவும் அவசியம் என்பதை இந்திய மக்கள் உணர்ந்து கொண்டிருப்பதால், தனது புதிய வங்கிச் சேவையை நேரம் பார்த்து ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

”ஏர்டெல் பேமெண்ட் பேங்க்” என பெயரிடப்பட்டுள்ள இந்த வங்கி, முதன் முதலாக ராஜஸ்தான் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி மூலம் தன்னுடைய பணப்பரிவர்த்தனை செயல்பாடுகளையும், அதிலுள்ள குறைகளையும் கண்டறிந்து அதனை களைய ஏர்டெல் முடிவெடுத்துள்ளது.

ஏர்டெல் வங்கியில் இணைய விரும்பும் வாடிக்கையாளர்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து ஏர்டெல் சேவை மையங்களிலும் புதிய வங்கிக் கணக்கை துவக்கலாம். இந்த ஏர்டெல் சேவை மையங்கள், இனி வங்கிச் சேவையை அளிக்கும் மையங்களாகவும் செயல்படும். இந்த வசதியானது கூடிய விரைவில் ஏர்டெல்லின் 10,000 சேவை மையங்களுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது.

இனி ஏர்டெல் வங்கி வழியாக நடக்கும் பணப்பரிமாற்றங்களை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கடைகளும், வர்த்தகர்களும் ஏற்றுக் கொள்வார்கள். மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் திறன்பேசியில் உள்ள ஏர்டெல் வங்கி குறுஞ்செயலி மூலம் பணப்பரிமாற்றங்களை எளிதில் செய்து கொள்ளலாம். இந்த வங்கியானது காகிதம் இல்லாத, முழுவதும் மின்னணு முறையில் இயங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் முதலீடு செய்யவும், எடுக்கவும் முடியும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் ராஜஸ்தானில் உள்ள ஒரு லட்சம் வர்த்தகர்களை தங்கள் வங்கிச் சேவைக்குள் ஈர்க்க ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/airtel-payments-bank-launched-begins-pilot-services-in-rajasthan-349201.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்…

Previous நான்கு மாதத்திற்குள் பத்து லட்சம் ரெட்மி திறன்பேசியை விற்றுள்ள பிளிப்கார்ட்..!
Next ஏ.டி.எம் வரிசையில் நிற்க இனி வாடகைக்கு ஆள் நியமிக்கலாம்..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *