உலக வெப்பமயமாதலால், கடும் விளைவுகளை சந்திக்க உள்ள மக்கள் : ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை..!


2-climate-change

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, புவி வெப்பமயமாததால் உலகில் உள்ள அனைத்து மக்களும் பாதிக்கப்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே புவி வெப்பமயமாதலால் ஏற்பட்டுள்ள தாக்கங்களை மனித சமுதாயம் உணரத் தொடங்கிவிடதாகவும், தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் இருந்த தட்பவெட்பநிலை, தற்போது 1 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதலால் ஏற்படக்கூடிய 82 தாக்கங்கள் இந்த ஆய்வில் பட்டியல் இடப்பட்டுள்ளன. இவற்றில் உயிரினங்களின் மரபணுவில் ஏற்பட உள்ள மாற்றங்கள் மற்றும் மக்களின் இடப்பெயர்ச்சி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. புவி வெப்பமயமாதலின் தாக்கமானது நிலப்பகுதி மட்டுமல்லாது கடல், நன்னீர் ஆதாரங்கள், வளிமண்டலம் ஆகியவற்றில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த உள்ளதாகவும் தொழிற்புரட்சிக்கு பிறகு அதிக அளவில் எரிபொருட்களை பயன்படுத்தியதால் உலகின் வெப்பநிலை இயல்பான அளவை விட 1.87 பாரன்ஹீட் அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

”இப்போதைக்கு உலகின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. ஆனால் மற்ற தாக்கங்களை ஏற்கனவே மனிதகுலம் உணரத் தொடங்கிவிட்டது. இந்த தாக்கத்தால் உயிரினங்களின் மரபணுவில் மாற்றம் ஏற்படும். மேலும் உயிரினங்களின் தகவமைப்பு, உடற்கூறு அமைப்பு உள்ளிட்டவை மாறும். அவை மொத்தமாக ஓரிடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு இடம்பெயரும்.

மனிதர்களை பொறுத்தவரை நோய்கள் அதிகரிக்கும். வழக்கமான அறுவடை பாதிக்கப்படும். மீன்வளம் குறையும். இதனால் உணவுப் பஞ்சம் ஏற்படும்.” என இந்த ஆய்வை நடத்திய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புவியிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் அளவை உட்கிரகிக்கும் அளவிற்கு நமது காடுகள் ஆரோக்கியமான நிலையில் இல்லை. இந்த புவி வெப்பமயமாதலை கடற்பரப்பு அதிக நாட்கள் சமாளிக்க முடியாது. அதன் விளைவாகத்தான் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவது, கடல் நீர் மட்டம் உயருவது, புயல்கள் உருவாவது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

”புவி வெப்பமயமாததால் என்னென்ன தாக்கம் ஏற்பட்டு வருகின்றன என்பதை மட்டும்தான் நாங்கள் ஆராய்ந்துள்ளோம். ஆனால் இந்த தாக்கங்கள் புவியை புரட்டிப் போட அதிக ஆண்டுகள் ஆகலாம் என நாங்கள் உறுதியாக கூற முடியாது. கார்பன் வெளியீட்டை நாம் இப்போதே குறைக்கத் துவங்கவில்லை எனில் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றங்களை சந்திக்க நேரிடும்.” என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

நன்றி:http://zeenews.india.com/environment/climate-change-global-warming-have-drastic-affects-on-earth_1948768.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous சீனாவில் தீப்பற்றி எரிந்த ஐ போன் 7..!
Next ஹேக்கரிகளிடமிருந்து கடவுச் சொற்களை விலைக்கு வாங்கும் முகநூல்..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *