மின்சார சார்ஜ் மையங்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவெடுத்துள்ள டெஸ்லா..!


8-tesla

உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, சில மாதங்களுக்கு முன்னர் முழு வீச்சில் உலகம் முழுவதும் தனது மின்சார கார்களை விற்பனை செய்யத் துவங்கியது. மேலும் தனது நிறுவன மின்சார கார்களை இலவசமாக சார்ஜ் செய்து கொள்வதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் 734 மையங்களை அமைத்திருந்தது.

இந்நிலையில் இனி தனது மின்சாரா சார்ஜ் மையங்களில் சார்ஜ் செய்ய கட்டணம் வசூலிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ”அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு பிறகு டெஸ்லா மின்சார கார்களை வாங்குபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 1000 கி.மீட்டர்கள் வரை பயணம் செய்வதற்கு இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம். அதன் பிறகு மீண்டும் சார்ஜ் செய்தால், அதற்கு வாகன உரிமையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.” என டெஸ்லா தெரிவித்துள்ளது. அதே வேளையில் இந்தாண்டு தங்கள் நிறுவன மின்சார கார்களை வாங்கியவர்கள், ஆயுட்காலம் முழுக்க இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஏற்கனவே 3 லட்சம் டெஸ்லா மின்சாரக் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டு அதிகரிக்குமானால், இலவசமாக சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் செலவினம் அதிகரிக்கும் என டெஸ்லா கணக்கிட்டுள்ளது. எனவே இந்த கட்டண முறையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால் மின்சார சார்ஜுக்காக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை டெஸ்லா நிறுவனம் தெரிவிக்க மறுத்துவிட்டது. ஆனால் பெட்ரோல் நிரப்புவதை விட இந்த கட்டணம் குறைவாக இருக்கும் என கூறியுள்ளது. அடுத்தாண்டு கட்டணப்பட்டியல் வெளியிடப்படும் எனவும், மின்சார விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தில் மாற்றங்கள் இருக்கும் எனவும் டெஸ்லா அறிவித்துள்ளது.

ஆனால் இந்த அறிவிப்பு டெஸ்லா நிறுவன கார்களின் விற்பனையை பாதிக்காது. ஏனெனில் மின்சார கார்களின் உரிமையாளர்கள் பெரும்பாலான நேரங்களில் தங்கள் வீடுகளிலேயே காரை சார்ஜ் செய்து விடுவார்கள். சார்ஜ் செய்ய முடியாத சூழலில், நெடுந்தூர பயணம் மேற்கொள்ளும் போதுதான் இந்த சார்ஜ் மையங்களின் உதவி தேவைப்படும்.

டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் வகை மின்சார கார்களை அரை மணி நேரம் சார்ஜ் செய்தால் சுமார் 170 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/tesla-motors-will-start-charging-a-fees-for-its-supercharging-stations-346264.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous குழந்தைகளுக்கான “ யூ டியூப் கிட்ஸ்” இந்தியாவில் அறிமுகம்..!
Next ஏழு இந்திய தூதரகங்களின் இணையதளங்கள் சைபர் தாக்குதல்..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *