இணையவசதி தடையால் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ள இந்தியா..!


4-internet

சிலமாதங்களுக்கு முன்பு காஷ்மீரில் புர்கான் வானி என்ற தீவிரவாதி இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மூன்று மாதங்களுக்கு இணைய சேவை தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக இணையம் மூலம் நடைபெறும் வர்த்தகத்தில் இந்தியா கடும் சரிவை சந்தித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

2015-16-ஆம் ஆண்டில் மட்டும் இதுபோன்ற இணைய தடைகளால் இந்தியா சுமார் 6,485 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள 19 நாடுகளின் 22 இடங்களில் இதுபோன்ற இணையத்தடை செய்யப்பட்டது. அவற்றில் அதிக அளவில் இழப்பை சந்தித்த நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

இந்த இழப்புக்கு இணைய வர்த்தகம் குறைந்தது ஒருபுறம் இருந்தாலும், தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இணைய வசதி துண்டிக்கப்பட்டதால், அம்மாநிலத்தில் இயங்கி வந்த பல தொழில்நுட்ப நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதும் முக்கிய காரணமாகும்.

புரூக்கின்ஸ் என்ற சர்வதேச அமைப்பு எடுத்த கணக்கெடுப்பில், 2015-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் 2016-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை உலகிலுள்ள 19 நாடுகளில் 81 முறை இணையவசதி பல்வேறு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அளவில் 16,080 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இழப்பில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக சவுதி அரேபியாவும், மூன்றாம் இடத்தில் மொராக்கோ நாடும் உள்ளன. இவற்றில் அதிக முறை இணையத் தடை விதிக்கப்பட்டதில் ஐ.எஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியா (348 முறை) முதலிடத்திலும், மொராக்கோ (182 முறை) இரண்டாம் இடத்திலும், இந்தியா (70 முறை) மூன்றாம் இடத்திலும் உள்ளன.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/india-faces-greatest-global-loss-from-internet-shutdowns-343435.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous தட்பவெட்ப நிலை அறிக்கையையும் இனி மெசெஞ்செரில் பெறலாம்..!
Next தீபாவளிக்கு டிவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ள புதிய எமோஜி..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *