வரிப்பிடித்தம் செய்யப்பட்டால் இனி குறுஞ்செய்தி வரும்..!


2-tax

மாத ஊதியம் வாங்கும் இந்தியர்களிடம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை TDS என்ற வரியை இந்திய வருமானவரித்துறை பிடித்தம் செய்கிறது. சில நேரங்களில் மாதச் சம்பளதாரர்களுக்கு எவ்வளவு வரி பிடித்தம் செய்யப்படுகிறது என்பது தெளிவாக தெரிவதில்லை.  இதனால் அவர்களின் மாத சம்பள அறிக்கையில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இனி ஒவ்வொரு முறை TDS வரி பிடித்தம் செய்யப்படும் போது, அது குறித்த தகவல் அடங்கிய குறுஞ்செய்தி மாத சம்பளதாரர்களின் கைபேசிக்கு அனுப்பப்படும்.

இந்த திட்டத்தை கடந்த திங்களன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி துவங்கிவைத்துள்ளார். இந்த புதிய திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள 2.5 கோடி மாத சம்பளதாரர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

”இனி மாத சம்பளம் வாங்குபவர்களிடம் வரிப்பிடித்தம் செய்யும் போது அதற்குரிய குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதனை தங்களுடைய மாத சம்பள அறிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்து எவ்வளவு தொகை பிடிக்கப்பட்டுள்ளது என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். இந்த திட்டம் கூடிய விரைவில் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.”  என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் அடுத்தகட்டமாக மாத சம்பளம் வாங்காத 4.4 கோடி பேருக்கு விரிவாக்கம் செய்யப்படும் எனவும், எனவே இதுவரை தங்கள் புதிய செல்போன் எண்களை மிண்ணனு வருமான வரிக்கணக்கில் குறிப்பிடாதவர்கள், அதனை விரைவில் பதியுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/income-tax-department-starts-sms-alert-service-to-inform-about-tds-deductions-343318.html

மேலும்   செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamill.

Previous உலக வெப்பமயம் காரணமாக மீன்களுக்கு வந்த நிலைமையை பாருங்க..!
Next திறன் கைக்கடிகாரங்களின் விற்பனை சரிவு..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *