ஒரு காலத்தில் புகைப்பட கேமரா உற்பத்தில் கோலோச்சிய கோடாக் நிறுவனம், டிஜிட்டல் கேமிராக்களின் வருகையால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. ஆனாலும் தனது நிறுவன பெயரை பல்வேறு தயாரிப்புகளின் வழியாக மக்களின் மனதில் நிலைநிறுத்த கோடக் நிறுவனம் முயன்று வருகிறது.
இதன் ஒரு கட்டமாக ”IM5” என்ற ஸ்மார்ட்போனை தயாரிக்க உள்ளதாக கடந்த ஆண்டு கோடக் நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது வரை அந்த போனின் தயாரிப்பு என்ன நிலையில் உள்ளன என தெரியவில்லை. இந்நிலையில் வரும் 20-ஆம் தேதி தனது நிறுவனத்தின் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளதாக கோடக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் இந்த போனின் முன்னோட்ட புகைப்படம் அந்நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் சில மணி நேரங்களில் அந்த ட்வீட் அழிக்கப்பட்டுவிட்டது. அதனால் கோடக் அறிவிக்கப்போகும் ஸ்மார்ட்போனில் என்ன சிறம்பம்சங்கள் இருக்கும் என்பது தற்போது வரை தெரியவில்லை.
சமீபத்தில் நொய்டாவைச் சேர்ந்த பிளாஸ்ட்ரானிக்ஸ் நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்துள்ள கோடக் நிறுவனம் ஹெச்.டி எல்.ஈ.டி தொலைக்காட்சிகளை தயாரித்து வருகிறது. சமீபத்தில் ஐந்து வகையான ஹெச்.டி தொலைக்காட்சிகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil
No Comment