ஸ்பெக்ட்ரம் ஏலம் : சேவையின் தரத்தில் முன்னேற்றம் ஏற்படுமாம்..!


6-telecomtower

கடந்த வாரம் நடந்து முடிந்த அலைக்கற்றை ஏலம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சில குறிப்பிட்ட அலைவரிசைகளை யாருமே ஏலம் எடுக்கவில்லை. எனவே மத்திய அரசு திட்டமிட்ட அளவு, இந்த ஏலத்தில் நிதியை திரட்ட முடியவில்லை.

இந்நிலையில் அலைக்கற்றை ஏலம் காரணமாக தொலைதொடர்பு நிறுவனங்கள், அதன் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கக் கூடிய சேவையின் தரம் அதிகரிக்கும் என தொலைதொடர்புத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக இந்திய மக்கள் இணைய டேட்டா பயன்படுத்தும் அளவு அதிகரித்து வருவதாகவும், இந்த தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவியாக இந்த ஏலம் அமைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

புள்ளிவிபரங்களின்படி, ஸ்மார்ட்போனில் இணையம் பயன்படுத்தும் ஒவ்வொரு இந்தியரும், மாதந்தோறும் 10 ஜிபி வரை டேட்டாவை உபயோகப்படுத்துகிறார்களாம். இந்த அளவு ஆண்டுதோறும் 20 முதல் 30 சதவீதம் அதிகரித்து வருகிறதாம்.

”வாடிக்கையாளர்களின் டேட்டா தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வந்த இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு, இந்த அலைக்கற்றை ஏலம் மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. இனி தாங்கள் ஏலம் எடுத்த அலைக்கற்றை வரிசைகளை கொண்டு, மற்ற நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவிற்கு தங்களுடைய சேவைத் தரத்தை அனைத்து நிறுவனங்களும் அதிகரிக்கும்.” என செல்போன் ஆபரேட்டர் சங்கத் தலைவர் ராஜன் மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் 30 சதவீதம் அதிகரித்து வருவதாகவும், எனவே வாடிக்கையாளர்களை கண்டறிவதில் செல்போன் சேவை நிறுவனங்களுக்கு பிரச்சனை இருக்காது எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த ஏலம் மூலமாக இந்தியாவில் 4ஜி சேவையின் தரம் அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அலைக்கற்றை ஏலத்தில் அதிக தொகையை தொலைதொடர்பு நிறுவனங்கள் செலவிடாததால், செல்போன் சேவை கட்டணங்களில் விலையுயர்வு இருக்காது எனவும், தங்கள் சேவையை மேம்படுத்த அதிக அளவு நிதியை முதலீடு செய்ய அந்த நிறுவனங்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் நிபுணர்கள் மகிழ்ச்சி தெரிவுத்துள்ளனர்.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/low-interest-spectrum-auction-may-still-improve-data-bandwidth-services-339809.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous ஐபோன் - 7 ஐ சலுகை விலையில் தருகிறது ஏர்டெல்..!
Next இனி அமெரிக்காவில் மெசெஞ்சர் மூலமாக வாக்காளர் பட்டியலில் இணையலாம்..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *