முகநூல் மெசெஞ்சரிலும் இனி உங்கள் குறுஞ்செய்திகள் பாதுகாக்கப்படும்..!


6-facebook-messenger

என்னாப்பு (வாட்ஸ் அப்) குறுஞ்செயலியில் ஒருவரிடம் பேசிய உரையாடலை, மூன்றாம் நபர் பார்க்க முடியாதவாறு “ end-to-end encryption” என்ற வசதி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதிக்கு பயனாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், முகநூல் நிறுவனமும் தனது மெசெஞ்சர் குறுஞ்செயலில் அனுப்பப்படும் உரையாடல்களை பாதுகாக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதிக்கு “ரகசிய உரையாடல்” எனவும் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் பீட்டா வடிவமாக வெளியிடப்பட்ட இந்த வசதி, தற்போது அனைத்து பயனாளர்களும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

என்னாப்பில் நம்முடைய கணக்கை எந்த போனில் வேண்டுமானாலும் திறந்து, பாதுகாக்கப்பட்ட உரையாடல் வசதியை பெற முடியும். ஆனால் முகநூலின் ரகசிய உரையாடல் வசதியில், நீங்கள் எந்த போனில், உங்கள் மெசெஞ்சர் கணக்கை தொடர்கிறீர்களோ, அதில்தான் கடைசி வரை இந்த வசதியை பெற முடியும். வேறு போனிற்கு இந்த வசதியை மாற்ற முடியாது.

நீங்கள் ரகசிய உரையாடல் வசதிக்குள் சென்ற உடன், அதன் பின்புறம் கருப்பு நிறத்தில் மாறிவிடும்,. இதனால் மெசெஞ்சரில் நீங்கள் தட்டச்சு செய்யும் சாதாரண உரையாடலுக்கும், பாதுகாக்கப்பட்ட உரையாடலுக்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் இந்த வசதியில் நீங்கள் வீடியோக்களை பகிர முடியாது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே புகைப்படங்களையும், ஸ்டிக்கர்களையும் பகிர முடியும். ஏற்கனவே என்னாப்புவின் பாதுகாக்கப்பட்ட உரையாடல் வசதிக்கு பல்வேறு அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மெசெஞ்சரின் இந்த புதிய வசதியும் சர்ச்சையில் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/facebooks-secret-conversations-brings-end-to-end-encryption-to-its-one-billion-messenger-users-339219.html?utm_source=top_stories

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous கூகுளின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்..!
Next முகத்தில் சுருக்கமா? தொழில்நுட்பம் இருக்க, கவலை எதற்கு?

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *