அமெரிக்க வாக்குப்பதிவு தொழில்நுட்பத்தில் புகுந்த ஹேக்கர்கள்..!


1-usa-election

வரும் நவம்பர் 8-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் அமெரிக்காவில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவை பொறுத்த வரை தேர்தல் ஓட்டெடுப்பானது முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கணினி வாக்குப்பதிவு வலையமைப்பை ஹேக்கர்கள் ஊடுருவியிருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ஓட்டுப்பதிவு தொழில்நுட்பம் தற்போதைய சூழலுக்கு லாயக்கற்றது என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த சூழலில் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தல் ஓட்டுப்பதிவில் ஊறு விளைவிக்கும் நோக்கோடுதான் இந்த செயல்கள் நடைபெற்றுருப்பதாகவும், ஆனால் இந்த ஊடுருவலினால் கணினி வலையமைப்பில் எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த சதி வேலைகளுக்கு பிண்ணனியில் ரஷ்யாவினால் நிதி உதவி பெறும் ஹேக்கர்கள் இருப்பதாகவும், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்புத் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனின் அதிகாரப்பூர்வ பிரச்சார இணைதளத்தை ஹேக்கர்கள் ஊடுறுவி சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நன்றி:http://in.reuters.com/article/usa-election-cyber-idINKCN1213L1

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous உலகின் மிகச்சிறிய இன்க்ஜெட் பிரிண்டர் : HP
Next பிளிப்கார்ட் இணையதளத்தில் பணம் செலுத்தும் வசதி முடங்கியது..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *