யாகூ பயனாளிகளின் கணக்குகளை திருடி விற்ற ஹேக்கர்கள்.!


1.yahoo

உலகின் முன்னணி இணையதள நிறுவனமான யாகூவின் சேவைகளான மை ஸ்பேஸ் மற்றும் லிங்டின் ஆகியவற்றில் கணக்குகள் வைத்திருந்த சுமார் 200 மில்லியன் பயனாளர்களின் விபரங்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.

யாகூ பயனாளர்களின் கணக்கு பெயர்கள், கடவுச்சொல், பிறந்தநாள் ஆகியவற்றை திருடிள்ள ஹேக்கர்கள் அவற்றை கள்ளச்சந்தையில் விற்றுள்ளனர். பீஸ் என்ற பெயரில் ஹேக்கிங் செய்துள்ள ஹேக்கர்கள், இவற்றை 2012-ஆம் ஆண்டிலிருந்து செய்து வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த குற்றச்செயல் குறித்து மிகப்பெரிய விசாரணையை மேற்கொள்ள யாகூ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

“எங்கள் நிறுவனம் பயனாளர்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. எனவேதான் எங்கள் பயனாளர்களை அவர்களின் கணக்குகளுக்கு வலிமையான கடவுச்சொற்களை அளிக்கவும், அடிக்கடி அவற்றை மாற்றவும் வலியுறுத்தி வருகிறோம், மேலும் யாகூவின் பல்வேறு சேவைகளை பயன்படுத்தும் பயனாளர்கள், ஓவ்வொரு கணக்குகளுக்கும் வெவ்வேறு பாஸ்வேர்டுகளை  அளிக்குமாறும் கூறுகிறோம்.” என யாகூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹேக்கர்கள் திருடியுள்ள கணக்குகள் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு, உபயோகப்படுத்தப்படாத பழைய கணக்குகள் எனவும், ஆனால் அவற்றை கொண்டு கணினி வலையமைப்பில் பல்வேறு நாச வேலைகள் செய்ய முடியும் என்பதால் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான வெரிசான் நிறுவனத்தால் ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு யாகூ நிறுவனம் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous எமோஜியில் பாலின பேதத்தை உடைக்க முயற்சிக்கும் ஆப்பிள்..!
Next ஐபோன் தீப்பற்றி எரிந்ததாக ஆஸ்திரேலிய இளைஞர் புகார்.!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *