3D கருப்பையால் எலி நாய்குட்டியை பெற்றெடுத்தது!


தற்போது மருத்துவத்தில் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதில் மிக முக்கியமானது கருமுட்டை மாற்றம். தற்போது விஞ்ஞானிகள் ஒரு நாயின் கருமுட்டையினை 3D உதவியுடன் பெண் எலியின் கருவில் செலுத்தி ஆரோக்கியமான நாய்குட்டியினை பிறக்கவைத்துள்ளனர்.

இந்த தகவலினை விஞ்ஞானிகள் பாஸ்டன் நகரில் நடந்த அறிவியல் கூட்டத்தில் தெரிவித்தனர். இந்த சாதனையினை செய்வதற்கு முன்பு பல்வேறு அறுவை சிகிச்சைகள் எலிக்கு மேற்கொள்ளப்பட்டது. அதற்காக 3D அச்சினை விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். முதலில் கருமுட்டையில் ஜெலட்டின் முறையில் ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்தனர்.

அதன் பிறகு அந்த முட்டை மயிர்கால்கள் கொண்டு புதிய செல்களை உருவாக்கி கருப்பையில் கருவினை உருவாக்கினர். இச்செயலிற்கு முன்பாக ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே எலி வயிற்றில் உள்ள கருப்பையினை நீக்கி விட்டு 3D-அச்சிட்ட செயற்கை கருப்பையினை பொருத்தினர். சில நாட்களுக்கு பிறகு எலி நாய்குட்டியினை நலமுடன் பெற்றெடுத்தது. இந்த ஆராய்ச்சி வெற்றி அடைந்ததை தொடர்ந்து இதேப் போல பல்வேறு ஆய்வுகளை மனிதர்களுக்கும் நடத்த உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

http://www.popsci.com/mice-give-birth-to-pups-thanks-to-3d-printed-ovaries

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous மனிதன் முதலில் வாழ்ந்த இடம் அயர்லாந்து!
Next நட்சத்திரம் வெடிக்கிறது

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *