காற்றை மாசுபடுத்தும் கால்நடைக் கழிவுகள்


அமெரிக்கா, ஐரோப்பா,  ரஷ்யா  மற்றும்  சீனா ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட காற்று மாசுபாட்டு ஆய்வில் திடுக்கிடும் உண்மை ஒன்று வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் நைட்ரஜன் உரங்கள், கால்நடை கழிவுகள் மனிதர்கள் ஏற்படுத்தும் காற்று மாசுபாட்டைக் காட்டிலும் பன் மடங்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பால் பல்வேறு நோய்கள் ஏற்படும். விவசாய மற்றும் கால்நடை கழிவுகளின் மாசுபாடு அமோனியா வடிவத்தில் ஏற்படுகிறது.

மேலும் வாகனங்களிலிருந்து வெளிவரும் நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் சல்பேடுகள், மின் உற்பத்தி நிலையங்கள், மற்றும் தொழில் துறை செயல் முறைகள் ஆகியவற்றிலிருந்து 2.5 மைக்ரோமீட்டர் முழுவதும்  மற்றும் மனித தலைமுடி எரிப்பு ஆகியவற்றிலிருந்து  காற்று மாசுபடுகிறது. இதனால் இதய நோய், நுரையீரல் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் காற்று மாசுபாட்டால் 3.3 மில்லியன் இறப்பு ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டும் 500,000-ற்கும் மேற்பட்டோர் இறந்து வருவதாக ஆய்வு கூறுகிறது. பெரும்பாலும் கால்நடைக் கழிவுகளின் பாதிப்பு அமெரிக்காவில் அதிகம் நிகழ்ந்து வருகிறது. இயற்கை முறையில் உணவுகளை கால்நடைகளுக்கு அளிக்காததே இதற்கு முக்கிய காரணம். இந்த மாசுபாடுகளை குறைத்தால்தான் வளிமண்டலத்தின் பாதிப்பை குறைக்க முடியும்

https://www.sciencedaily.com/releases/2016/05/160516110423.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

 

 

Previous கேடு விளைவிக்கும் வைரஸ்களை அழிக்க புதிய மூலக்கூறு
Next தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை நாட்குறிப்பு

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *