மாடித்தோட்டத்துக்கு ஏற்ற வெர்மிகுலேட்!


கடினப் பாறைகளில் இருந்து கிரானைட் வெட்டி எடுக்கும்போது “வெர்மிகுலேட்” எனும் கனிமப்பொருள் கிடைக்கும். புழுக்கள்  போன்று நீள் தன்மையும், வளையும் தன்மையும் இருப்பதால் ‘வெர்மிகுலாரிஸ்’ என்ற லத்தின் பெயர் இதற்கு சூட்டப்பட்டது. அரசாங்கத்துக்கு லாபம் ஈட்டும் வகையில் விற்பனை செய்து வருகிறது. தமிழ்நாடு கனிம நிறுவனம் இந்த வெர்மிகுலேட் தனிமத்தை விவசாயம் மற்றும் மாடித்தோட்டங்களில் பயன்படுத்தி மண்ணின் தேவையைக் குறைக்க முடியும்.

இது குறித்து தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் இயக்குநர் வள்ளலாரிடம் பேசினோம். ‘கடினமான பாறைகளிலிருந்து கிரானைட் பிரித்தெடுக்கும்போது வெர்மிகுலேட் கிடைக்கும். இது ஐந்து தரங்களில் இருக்கும். முதல் மூன்று தரங்களில் இருக்கும் வெர்மிகுலேட் மூலம், வெர்மிடைல் என்ற டைல் வைகையை உற்பத்தி செய்கிறோம். இதை மொட்டை மாடியில் பதிக்கும்போது வீடு முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும். அதனால் குளிர்சாதனங்கள் தேவைப்படாது தவிர, இதில் நீர்க்கசிவையும் தடுப்பதால் கட்டடம் பல ஆண்டுகளுக்கு பலமாக இருக்கும். சுற்றுச்சூழலுக்கு இது உகந்தது. இது சதுர அடி அளவில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் சதுர அடி விலை 60 ரூபாய்தான்.

நான்காம், ஐந்தாம் தர வெர்மிகுலேட் தனிமத்தை நேரடியாக விவசாயத்தில் பயன்படுத்தலாம். மாடித்தோட்டம் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் மண்ணோடு வெர்மிகுலேட்டைக் கலந்து பயன்படுத்தும்போது மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். வேர்கள் தடைபடாமல் மண்ணில் ஊடுருவும். மண்ணின் தேவையும் குறையும். இது எடை குறைவாக இருப்பதால் மாடிகளில் வைக்கும் தொட்டிகளால் தளத்துக்கு  பாதிப்பு ஏற்படாது. இப்போதுதான் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். வருங்காலங்களில் இப்பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். இடுபொருட்கள் மற்றும் வெர்மிடைல் தேவைப்படுவோர் தமிழ்நாடு கனிமநிறுவனத்தை அணுகலாம்” என்றார்.

மண்ணால் ஆன கிராஃபிடைல்!

வெர்மிடைல் போலவே ‘கிராஃபிடைல்’ எனும் டைல் வைகையைத் தயாரிக்கிறது தமிழ்நாடு கனிம நிறுவனம். கிராஃபிடைல் முற்றிலும் மண்ணால் ஆனது. இது கார் பார்க்கிங் போன்ற வீட்டுக்கு வெளியே அமைக்கப்படும் தரைகளுக்கு ஏற்றது.

வெர்மிடைல் ஓடுகளைப் பதிக்க விரும்புபவர்கள் . . . மாடித்தளத்தை சிமெண்ட, மணல் கலவையை தளத்தில் பரப்பி அதன்மேல் சிமெண்ட பால் ஊற்றி 3 மில்லி மீட்டர் இடைவெளியில் ஓடுகளைப் பதிக்க வேண்டும். பிறகு, இந்த இடைவெளியில் வாட்டர் புரூப் கலக்கப்பட்ட சிமெண்ட கூழ் கொண்டு நிரப்ப வேண்டும். இரண்டு நாட்கள் காயவிட்டு பிறகு பயன்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு கனிம நிறுவனம்!

தமிழ்நாடு கனிம நிறுவனம் 1979-ம் ஆண்டில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும். தமிழகத்தில் உள்ள கனிம வளங்களைக் கண்டுபிடித்து வெட்டி விற்பனை செய்வதுதான் இந்நிறுவனத்தின் நோக்கம். இந்நிறுவனத்தின் மூலம் திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கிரானைட் வெட்டி எடுக்கப்படுகின்றன. திண்டிவனம் அருகே குன்னம் என்ற இடத்தில் வெட்டி எடுக்கப்படும் கிரானைட்தான், இந்தியாவில் முதல் தர கறுப்பு வண்ண கிரானைட் ஆகும். தவிர, சிவகங்கையில்  கிராஃபைட், திருப்பத்தூரில் மைக்க, அரியலூரில் சுண்ணாம்பு கற்கள், காஞ்சிபுரத்தில் மணல் வளங்கள் பாதிக்கப்படாத அளவில் பிரித்தெடுக்கும் பணியைமேற்கொண்டு வருகிறது, தமிழ்நாடு கனிம நிறுவனம்.

 

தொடர்புக்கு,

தமிழ்நாடு கனிம நிறுவனம்

சேப்பாக்கம், சென்னை.

தொலைபேசி: 044-28410382.

நன்றி!

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

 

Previous நூல்1: அளவை அட்டவணை
Next பெர்முடா முக்கோணத்தை உருவாக்கியது அனுமனா? 

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *