காலநிலை மாற்றத்தால் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத் தீ


தற்போது உலகில் ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தால் எல்நினோ பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக உலக அளவில் காட்டுத் தீ அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றம் பற்றி ஆய்வு செய்து வரும் ஆல்பர்ட்டா கருத்தின்படி, இந்த ஆண்டு மட்டும் 330 காட்டுத்தீ நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

காட்டுத் தீ பாதிப்புகள் 1979-வது அதிகரித்த வண்ணம் உள்ளது. குளிர்காலத்தில்கூட மேற்கு கனடாவில் அதிகமாக வெப்பம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டனர். அப்பகுதியில் கனடா அரசு அவசர பிரகடனத்தை அறிவித்தது. எல்நினோ பாதிப்பால்தான் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பருவமழைக் காலத்தில்கூட அதிக வறட்சி நிலவியது. ஆல்பர்ட்டா காட்டுத் தீ பாதித்த படத்தை செயற்கைக்கோள் மூலம் படம்பிடித்து காட்டியுள்ளார். எல்நினோ பாதிப்பால் வெப்ப புயல் உலகில் அதிகம் ஏற்பட்டு வருகிறது. தற்போது உலக அளவில் வெப்பநிலை 32.6c வெப்பநிலை நிலவுகிறது. இந்த ஆண்டு வெப்பநிலை தொடர்ந்து நான்கு மாதங்கள் சராசரி வெப்பநிலையை விட அதிகமாக வெப்பம் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த பாதிப்பு பற்றிய படத்தினை உலக வரைபடம் மூலம் ஆல்பர்ட்டா காட்டியுள்ளார். அதிக வெப்பமயமாதலால் பூமி அதிக அதிர்விணை சந்திக்க நேரிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த பாதிப்புகள் அனைத்தும் மனிதர்களாலேயே நிகழ்வதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

விஞ்ஞானிகள் கூற்றுப்படி  உலகின் வடக்கு அட்சரேகைப் பகுதியில் அதிகமான காட்டுத் தீ பாதிப்பு ஏற்படுவது தெரிந்துள்ளது. கடந்த அரை நூற்றாண்டுகளாக உலகில் வெப்பம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 1997-ம் ஆண்டு மக்கள் தொகை 30,000 மில்லியன் அளவுதான் இருந்தது. ஆனால் இப்போது 60,000 மில்லியனை தாண்டி விட்டது. மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உலகில் வெப்ப நிலையும் உயர்ந்துள்ளது.

https://www.quora.com/Is-the-ISROs-IRNSS-better-than-American-GPS

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

 

Previous களைந்து செல்லும் லேசர் அறிமுகம்
Next செயலி வழி வர்த்தகம் - லட்சக் கணக்கான தொழில் வாய்ப்புகள்

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *