இதய செயல்பாட்டை கண்காணிக்கும் புதிய சாதனம்


நியூயார்க் :  தங்க நானோ துகள்களை பயன்படுத்தி, தென் கொரிய விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக இதய துடிப்பை கண்காணிக்கும் ஒரு சிறந்த மெல்லிய நீட்சியடையக் கூடிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.  இது உடலிலேயே அணியக்கூடிய சாதனம் ஆகும்.

இந்த சாதனம் தனிப்பட்ட மற்றும் மொபைல் மருத்துவ-கண்காணிப்பு அமைப்புகளால் மேம்படுத்தப்பட்டுள்ளது. கடிகாரங்கள் மற்றும் பேண்டுகள் என தற்போது கிடைக்கும் அணியக்கூடிய சாதனங்கள், அனைத்து சூழ்நிலைகளிலும் ஏற்றது அல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மின்னணு பொருட்களின் விரைவான முன்னேற்றத்தின் அடிப்படையில் ஒரு அவசர தேவைகளுக்கு வடிவத்தை மாற்றக்கூடிய மின்னணு சாதனங்கள் வழிவகுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சாதனம் வடிவத்தை மாற்றக்கூடியதாகவும், நீட்சியடைய கூடியதாக உள்ளதால் மாற்றுத்திறனாளிகளும் எளிதில் அணிய கூடிய வகையில் உள்ளது என்று அவர்கள் கூறினார்கள்.

2 (1)

மொபைல் சுகாதார கண்காணிப்பு, உயர் செயல்திறனை கொண்ட உயிரிமின்னணுவியலை சார்ந்த தரவு பகுப்பாய்வு, உணர்கருவிகள், ஒலிபெருக்கிகள், மற்றும் நினைவக தொகுதிகள் போன்ற பல்வேறு மின்னணு பாகங்களை கொண்ட சாதனம் என எதிர்கால அணியகூடிய சாதனங்களின் வளர்ச்சி தொடரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த சாதனத்தின் மூல இதயத்தின் நம்பகமான தரவு,  ஈசிஜி சிக்னல்கள் மூலம் பெறப்பட்டதை நிரூபித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சாதனம் தங்க நானோ துகள்கள் மற்றும் நீட்டிக்கும் தன்மை கொண்ட சிலிக்கான் சவ்வினால் தயாரிக்கப்படுகிறது. மேலும் இது நீண்ட கால நினைவாற்றல் சேமிப்புக்கு பொருத்தமானதாக கருதப்படுகிறது.

http://zeenews.india.com/news/health/health-news/stretchy-wearable-device-to-monitor-heart-functioning_1841348.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous 3D-யில் ஜெல்லி அறுவை சிகிச்சை
Next மிக எளிதாக இதய பாதிப்பை கண்டுபிடிக்கும் நுட்பம்

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *