புற்றுநோயை குணப்படுத்தும் புதிய முறை


புற்றுநோய்கான சிகிச்சை மலேரியாவிடம் இருக்கிறதா? என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த ஆராய்ச்சியை அவர்கள் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் மலேரியாவைக் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது , புற்றுநோய்க்கான மருந்தை இதன்மூலமாக கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

12

13

கர்ப்பிணி  பெண்களின் வயிற்றில் நஞ்சுக்கொடியுடன் (பிளசென்டா) இணைந்துள்ள மலேரியாவின் ஒட்டுண்ணியின் கார்போஹைட்ரேட், புற்றுநோய் செல்களின் மீதுள்ள கார்போஹைட்ரேட்டைப் போலவே அமைந்துள்ளது என டென்மார்க்கின் கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

எனவே, நஞ்சுக்கொடிகளில் இந்த கார்போஹைட்ரேட் இருந்தால், புற்றுநோய் வளர்ச்சியடையும் என்றும், மேலும் இது எளிதாக அந்த நபரை தாக்க கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

10 (1)

சில மாதங்களாக நச்சுக்கொடி மற்றும் புற்றுநோயின் வளர்ச்சியை ஒப்பிட்டு பார்த்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதில், புற்றுநோய் செல்களை அழிக்கும் நச்சுக்கலவையுடன் கூடிய மலேரியா புரதத்தை புற்றுநோய் செல்களோடு சேர்க்க முடிவுசெய்துள்ளனர்.

புற்றுநோய் செல்கள் இந்த மலேரியாவின் புரதத்தை உறிஞ்சுவதன் மூலமாக புற்றுநோயை குணப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள்  நம்புகின்றனர். இந்த ஆராய்ச்சி தற்போது எலியின் மீது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் மனிதர்களுக்கு செய்யப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

http://elitedaily.com/life/cure-cancer-found-accidentally-malaria/1246641/

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous 3D ஆல் அச்சிடப்பட்ட மைக்ரோ ஊசிகள் வலி இல்லாமல் மருந்தை செலுத்துகிறது.
Next உலகின் முதன்முதலில் கருப்பையில் ஸ்டெம் செல் சிகிச்சை

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *